சிறு, குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு கலைஞர் கடன் உதவி திட்டத்தில் 20 லட்சம் வரை குறைந்த வட்டியில் கடன்!
தமிழ்நாடு அரசின் குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி (தாய்கோ வங்கி) கிளைகளில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு மிக குறைந்த வட்டியில் 7 % வட்டியில் ரூபாய் 20 இலட்சம் வரை நடைமுறை மற்றும் மூலதன கடன்கள் வழங்கும் புதிய திட்டமான கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு அசையா சொத்து அடமானத்தின் பேரில் கடன் வழங்கப்பட உள்ளது.
கடன் பெற தகுதிகள்:
1. இந்த திட்டத்தில் குறைந்தபட்ச வயது 18 ஆகவும் அதிகபட்ச வயது 65க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
2. புதிய மற்றும் ஏற்கனவே இயங்கி வரும் குறு உற்பத்தி நிறுவனங்கள்.
3. தொழில் முனைவோர்களுக்கு சிபில் மதிப்பீடு 600 புள்ளிகளுக்கு குறையாமல் மற்றும் இரண்டு ஆண்டுகளாக ஏற்கனவே லாபத்தில் இயங்கும் நிறுவனங்கள்.
4. பிற நிறுவனங்களில் அதிக வட்டிக்கு பெற்ற கடன்கள் விதிமுறைக்கு உட்பட்டு குறைந்த வட்டிக்கு மாற்றி கொள்ளலாம்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை சார்ந்த ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் மற்றும் குறு உற்பத்தி நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை,திருச்சி-620 001.(தொடர்பு எண். 8925534026) மற்றும் கிளை மேலாளர், தாய்கோ வங்கி, ப்ரோமினேட் ரோடு, அமெரிக்கன் மருத்துவமனை பஸ் நிறுத்தம் அருகில், திருச்சி-620001.(தொடர்பு எண்.0431-2462745) தொடர்பு கொண்டு கலைஞர் கடன் உதவி திட்டத்தில் பயன் அடையுமாறு தொிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப்குமார்,இ.ஆ.ப. அவர்கள் தொிவித்துள்ளார்.
வெளியீடு:
உதவி இயக்குநா்,
செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம்,
திருச்சிராப்பள்ளி.