முகேஷ் அம்பானி மகன் திருமணம் ஏற்பாடும் – வேதனையும், கோபமும்

0
குஜராத்தின் ஜாம்நகர் சொர்க்கம் ஆனதாம். பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்செண்ட் திருமண நிச்சய விழா‌‌… மார்ச் 1 முதல் 3 வரை… பல் நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட மிகச் சிறந்த சமையல் நிபுணர்கள் மூலம் 2500 உணவு வகைகள்.3 வேளை உணவு தவிர, நள்ளிரவில் நொறுக்குத்தீனி மட்டும் 85 வகையாம்… உலகின் பல நாடுகளின் தலைவர்கள், கார்ப்பரேட்டுகள்,சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் எல்லாம் வருகை.. இதற்காகவே ஜாம்நகர் விமானநிலையம் சர்வதேச விமான நிலையமாக பிப்-25 முதல் மார்ச் -5 வரை தரம் உயர்த்தி விரிவாக்கம் செய்து தந்துள்ளது மோடி அரசு.
தன் மகனின் திருமணத்திற்காகவே தாய் நீடா அம்பானி பெரும் கோயில் வளாகம் கட்டுகிறார். அதில் 14 தெய்வங்களின் கோயில்கள் இருக்குமாம்… சரி..இதற்கெல்லாம் செலவு எவ்வளவு? அதிகமில்லை 1000 கோடி தான். அடேங்கப்பா 1000 கோடியா? என்று வாயப் பொளந்தீங்கன்னா..? தேசபக்தி இல்ல… ஒரு இந்தியரின் வளர்ச்சியைப் பார்த்து பெருமைப்படாம…, உங்களுக்கு பொறாமைன்னு சொல்லுவாங்க.
நமக்கு பொறாமை எல்லா இல்லீங்க…
அந்த குஜராத்தில மட்டும் போன 3 வருசத்துல வாழ வழியில்லாம 25,748 பேர் தற்கொலை பண்ணி செத்துட்டாங்களாம். அதுல 500-க்கும் மேல மாணவர்களாம். இந்த வேதனையும்,கோபமும் தாங்க… மத்தபடி மணமக்கள் நீடூழி வாழ்க!
Leave A Reply

Your email address will not be published.