மா.செ. பழனியப்பனுக்கு அடிக்கும் அடுத்தடுத்த ஜாக்பாட் !

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

மா.செ. பழனியப்பனுக்கு அடிக்கும் அடுத்தடுத்த ஜாக்பாட் !

 

அதிமுகவில் இருந்த பழனியப்பன் பிறகு அமமுகவுக்கு சென்றார். அங்கிருந்து அவரை திமுகவுக்கு இழுத்து வந்தவர் தற்போதைய தமிழக அரசியலில் ஆக்டோபஸ்  என்று வர்ணிக்கப்படும் அமைச்சர் செந்தில் பாலாஜி.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

2021 ஜூலை 3-ம் தேதி பழனியப்பன் திமுகவிற்கு வந்த போதே, உங்களுக்கு உரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தருவேன் வாக்குறுதி கொடுத்தார் செந்தில் பாலாஜி.

நீங்கள் வேலை பெறுவது எளிது...

அதே நேரத்தில் பழனியப்பன், திமுகவில் இணையும் விழாவில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் நாம் வெற்றி வாய்ப்பை இழந்தோம். பழனியப்பன் சிறிது காலம் முன்பே திமுகவுக்கு வந்திருந்தால் தருமபுரியும் நமதாக இருந்திருக்கும் என்றார்.

 

3

திமுக தலைவர் முக ஸ்டாலின் நன்னம்பிக்கையைப் பெற்றிருந்தாலும், பழனியப்பன் திமுகவில் இணைந்த உடனே அவருக்கு முக்கியப் பொறுப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை. எனினும் சோர்வடையாமல், கட்சிக் கூட்டங்கள், பொதுக்கூட்டம் என தீவிரமாக செயல்பட்டு வந்தார்.

4

கடந்த மே மாதம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஸ்டாலின் பங்கேற்ற பட்டமளிப்பு விழா மேடையில் முனைவர் பட்டம் பெற்றார் பாப்பிரெட்டிபட்டி பழனியப்பன். முனைவர் பட்டம் பெற்ற பழனியப்பனை மேடையில் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார். அரசியலில் பணியாற்றிக் கொண்டே ஆராய்ச்சிப் பட்டம் பெற்றுள்ள பழனியப்பனை வியந்து பாராட்டிய ஸ்டாலின் அதன் தொடர்ச்சியாக

 

பென்னாகரம், பாலக்கோடு ஆகிய தொகுதிகள் அடங்கிய தருமபுரி மேற்கு மாவட்டப் பொறுப்பாளராக இருந்த இன்பசேகரன் மாற்றப்பட்டு, அப்பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் பழனியப்பன்.

மா.செ. பழனியப்பன்
மா.செ. பழனியப்பன்

பாலக்கோடு தொகுதி அதிமுகவின் கே.பி.அன்பழகன் கோட்டையாக உள்ளது. அவர் கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இதனால் அப்பகுதியை திமுக கோட்டையாக மாற்றும் முயற்சியில் பழனியப்பன் ஈடுபட்டுள்ளார்.

 

பழனியப்பன் மாவட்ட செயலாளராக பொறுப்பு ஏற்ற உடன் கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். அதே போல் திமுகவை வலுப்படுத்த அதிமுக, பாமக, அமமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் தலைமை மீது அதிருப்பதியில் உள்ள நிர்வாகிகளை திமுகவில் இணைக்கும் வேலையை முழு மூச்சாக இருக்கிறார்.

 

இந்நிலையில் பாலக்கோடு தொகுதியில் உள்ள தண்டுகாரனஹள்ளி ஊராட்சி தலைவராக உள்ளவர் மணி. இவர் பல ஆண்டுகளாக பாமகவில் உள்ளார். நேற்று பழனியப்பன் அப்பகுதியில் திமுக நிர்வாகிகளை சந்தித்து வந்தார். அப்போது பாமக ஊராட்சி மன்ற தலைவர் மணி, பழனியப்பன் முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டார். அதே நேரத்தில் இந்த நிலையில் திமுக தலைவர் பதவி தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் மா.செ. பழனியப்பனுக்கு பேசி வாழ்த்து சொல்லி சென்னைக்கு வர சொல்லியிருக்கிறார்

அநேகமாக அடுத்த ஜாக்பாட்டாக  வாரியதலைவர் பொறுப்பு கிடைக்கப்போகிறது என்கிறார்கள். பழனியப்பன் ஜெ. ஆட்சியின் போது உயர்கல்விதுறை அமைச்சராக இருந்தவர் என்பதால் அவருக்கு அந்த துறை சார்ந்த வாரிய பொறுப்பு கிடைக்கும் என்கிறார்கள்.

 

பழனிப்பனுக்கு கிடைக்க போகும்  இந்த அடுத்தடுத்த ஜாக்பாட் குறித்து அமைச்சர் பொன்முடி ஏக வருத்தத்தில் இருக்கிறார். அவருக்கு இந்த வாரிய பொறுப்பு கிடைக்ககூடாது என்கிற முனைப்பில் காய்களை நகர்த்தி வருகிறார்.

 

பழனியப்பனின் நல்ல நேரமோ, பொன்முடியின் கெட்ட நேரமோ.. ஓசி பஸ், பேச்சு அவருக்கு மக்களிடத்தில் பெரிய கெட்டபெயரை ஏற்படுத்தி உள்ளதால் கட்சி தலைமை அதிர்ப்தியில் இருப்பதாக சொல்கிறார்கள்..

 

மு. வடிவேல் 

 

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.