“நானும் ரவுடி தான்” – ’மதராஸ் மாஃபியா கம்பெனி’
‘அண்ணா புரொடக்ஷன்ஸ்’ பேனரில் வி.சுகந்தி அண்ணாதுரை தயாரித்து விரைவில் தியேட்டர்களில் ரிலீசாகவுள்ள படம் ‘மதராஸ் மாஃபியா கம்பெனி. ஏ.எஸ்.முகுந்தன் டைரக்ட் பண்ணியுள்ள இப்படத்தில் ஆனந்தராஜ், சம்யுக்தா, ஆராத்யா, தீபா சங்கர், ஷகிலா, முனீஸ்காந்த், சசிலயா, ராம்ஸ், ஆனந்த்பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவு : அசோக்ராஜ், இசை : ஸ்ரீகாந்த் தேவா, பி.ஆர்.ஓ. : சதீஷ் [ எஸ்-2மீடியா ]
படத்தின் டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழா, இருநாட்களுக்கு முன்பு சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக டைரக்டரும் ஃபெப்சி தலைவருமான ஆர்.கே.செல்வமணி, டைரக்டர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சிலர்…
தயாரிப்பாளர் அண்ணாதுரை,

“இப்போது வருசத்துக்கு 200 படங்கள் வந்தாலும், 10 படங்கள் தான் ஜெயிக்குது. இருந்தாலும் புதிய புதிய தயாரிப்பாளர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அதே போல் தான் நாங்களும் இந்த நல்ல கதையை நம்பி படமெடுத்துள்ளோம். இது வெற்றிபெறும் என நம்பிக்கை இருக்கிறது”
ஹீரோயின் சம்யுக்தா,

“இதில் போலீஸ் ஆபீசராக நடித்துள்ளேன். இதற்காக ஸ்பெஷல் பயிற்சி எடுத்தேன். தயாரிப்பாளர் அண்ணாதுரை சார் மிகவும் அமைதியானவர், நல்ல மனசுள்ளவர். அவருக்காக இப்படம் ஜெயிக்க வேண்டும்”.
ஹீரோயின் ஆராத்யா,
“தமிழ்ப்பெண்ணான நான் இதில் ஆங்கிலோ இந்தியனாக நடித்துள்ளேன். மலையாள நடிகைகளிடம் ‘டெடிகேஷன்’ இருப்பதால் தான் அவர்களை நடிக்க வைக்கிறேன்னு டைரக்டர்மாரி செல்வராஜ். அப்படின்னா தமிழ் நடிகைகளிடம் அந்த டெடிகேஷன் இல்லையா? எங்களுக்கும் சான்ஸ் கொடுத்துப்பாருங்க. நாங்களும் டெடிகேஷனுடன் நடிக்கிறோம். மீடியா நண்பர்கள் இதை மாரிசெல்வராஜின் கவனத்துக்கு கொண்டு போகவேண்டும்”.

தீபா சங்கர்,
“பார்க்கத் தான் ஆனந்தராஜ் அண்ணன் கரடுமுரடா இருப்பார். ஆனா குழந்தை மனம் கொண்டவர். இந்தப் படத்தில் அவருக்கு மனைவியா நடிச்சிருக்கேன். படம் உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்”.
ஸ்ரீகாந்த் தேவா,
“படத்துல ரெண்டே பாட்டு தான். ரெண்டும் ஹிட்டு தான். எல்லா கமர்ஷியல் அம்சங்களுடனும் படத்தை எடுத்துள்ளார் டைரக்டர் முகுந்தன்”.
ஆர்.வி.உதயகுமார்,
“சூப்பர் ஸ்டார் ரஜினி, ரகுவரன், அருண்பாண்டியன், தலைவசால் விஜய், இந்தப் படத்தின் ஹீரோ ஆனந்தராஜ் என எல்லோருமே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் தான். என்னுடைய முதல் படமான ‘உரிமை கீதம்’ தான் ஆனந்தராஜுக்கு முதல் படம். இதுவரை 400 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இன்னும் நூறு படங்கள் நடிப்பார். டைரக்டர் முகுந்தனின் உழைப்பைப் பார்த்து தயாரிப்ப்பாளர் மகிழ்ச்சியாக இருக்கிறார். படம் ஜெயித்து மேலும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துகிறேன்”.
ஆர்.கே.செல்வமணி,
“நல்ல அனுபவசாலியான டிரைவர்கள் தான் விபத்தில்லாமல் கார் ஓட்டுவார்கள். அதுபோலத்தான் சினிமாவும். ஒரு டைரக்டரோ, பல டைரக்டர்களோ.. அவர்களிடம் வேலை பார்த்த உதவி இயக்குனர்களைத் தேடிப்பிடித்து தயாரிப்பாளர்கள் சான்ஸ் கொடுக்கணும். யார்ட்டயுமே அசிஸ்ண்டே இல்லாம ஷாட் பிலிம் எடுத்துட்டு வர்ற ஆளுங்களை நம்புறது ரில்ஸ்க் தான்”.

டைரக்டர் முகுந்தன்,
“சினிமாவைக் காதலிப்பவர் அண்ணாதுரை சார். அனைவருக்கும் நல்ல சம்பளம் கொடுத்தார். ஆனந்தராஜ் சாரிடம் கதை சொன்ன போது, முதலில் மறுத்தார். பின்னர் விடாப்பிடியாக அவரிடம் ஆறேழு முறை கதை சொன்னபிறகு தான் சம்மதித்தார். எனக்கு ஒத்துழைப்புக் கொடுத்து இப்படம் சிறப்பாக வருவதற்கு காரணமான நடிகர்-நடிகைகள், டெக்னீஷியன்கள் அனைவருக்கும் நன்றி”.
ஆனந்தராஜ்,
“நானும் ஆர் கே.செல்வமணியும் பிலிம் இன்ஸ்டிடியூட் நண்பர்கள். என்னை அறிமுகப்படுத்திய ஆர்.வி.உதயகுமார் உட்பட அனைத்து டைரக்டர்களுமே என்னை செத்துகியவர்கள், சிறக்க வைத்தவர்கள். ஆரம்பத்தில் என்னை பலருக்குப் பிடிக்காது. ஏன்னா நான் ரவுடித்தனம் பண்ணியது தான். ஆனா இப்ப அப்படியெல்லாம் இல்லை, ரொம்பவே மாறிட்டேன்.

டைரக்டர் முகுந்தனின் அன்புத் தொல்லைக்காகாத் தான் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தேன். தயாரிப்பாளரின் தாராள மனசுக்கு இந்த மதராஸ் மாஃபியா கம்பெனி பெரிய வெற்றிக் கம்பெனியாகும்”.
— ஜெ.டி.ஆ







Comments are closed, but trackbacks and pingbacks are open.