அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘மதறாஸ் மாஃபியா கம்பெனி’

திருச்சியில் அடகு நகையை விற்க

தயாரிப்பு: ‘அண்ணா புரொடக்சன்ஸ்’ வி.சுகந்தி அண்ணாதுரை, டைரக்டர்: ஏ.எஸ்.முகுந்தன், கதை: வி.சுகந்தி அண்ணாதுரை, ஆர்டிஸ்ட்: ஆனந்தராஜ், சம்யுக்தா ஷண்முகநாதன், ஆராத்யா, முனீஸ்காந்த், தீபா சங்கர், சசிலயா, ராம்ஸ். ஒளிப்பதிவு: அசோக் ராஜ், இசை: ஸ்ரீகாந்த் தேவா, எடிட்டிங்: எஸ்.தேவராஜ், பி.ஆர்.ஓ.: சதீஷ் ( எஸ்-2 மீடியா).

சென்னையில் தாதாக்கள், ரவுடிகள்னாலே வடசென்னை தான் என்பது தமிழ் சினிமாவில் ஆண்டாண்டு காலமாக வலம் வரும் கதை. அதே கதை தான் இப்போது வலம் வந்து கொண்டிருக்கும் ‘மதறாஸ் மாஃபியா கம்பெனி. இதில் ஒரே ஒரு சின்ன மாற்றம் தென்சென்னையின் வடபழனி ஏரியாவில் ஒரு ரவுடி இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

மதறாஸ் மாஃபியா கம்பெனி
மதறாஸ் மாஃபியா கம்பெனி

பூங்கா[எ] பூங்காவனம் [ஆனந்தராஜ்] தான் வடசென்னை ராயபுரம் பகுதியின் ஆகப்பெரிய தாதா. இவருக்கு அடுத்து ஆங்காங்கே சின்னச் சின்ன ரவுடிகள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். எம்.என்.சி. கம்பெனி போல எம்.எம்.சி.[ மதறாஸ் மாஃபியா கம்பெனி]யின் சி.இ.ஓ.வாக இருக்கும் பூங்காவனம், எம்.என்.சி பாணியில் எச்.ஆர்.மூலம்  ரவுடித் தொழிலுக்கு இண்டர்வியூ வைத்து செலக்ட் பண்ணுகிறார். இந்த ஐடியா ரொம்ப சுவாரஸ்யமாத்தான் இருக்கு. ஆனா அதை எக்ஸ்கியூட் பண்ணிய விதம் தான் சப்புன்னு ஆகிப்போச்சு டைரக்டரே…

https://www.livyashree.com/

ஏரியாவில் இருக்கும் சின்ன ரவுடிகளைக் கூட்டி வந்து சிண்டிகேட் மீட்டிங் போட்டு, அசைன்மெண்ட் கொடுக்கிறார். இதனால் அந்த சின்ன ரவுடிகளுக்கு பூங்கா மேல கடுங்கோபம். எல்லா ரவுடித்தனம் பண்ணினாலும் பூங்கா மேல ஒரு எஃப்.ஐ.ஆர்.கூட பதிவாகாமல் பார்த்துக் கொள்கிறார் சிட்டி கமிஷனர். இந்த நிலையில் தான் பூங்காவை என்கவுண்டரில் போட்டுத் தள்ளும் அசைன்மெண்டை புதிய ஐ.பி.எஸ். அதிகாரி திகழ் பாரதி [ சம்யுக்தா ஷண்முகநாதன்]யிடம் கொடுக்கிறார் டி.ஜி.பி. எம்.எம்.சி.யின் சி.இ.ஓ.வான பூங்காவை பாரதி போட்டுத் தள்ளினாரா? என்பதன் க்ளைமாக்ஸ் தான் இந்தப் படம்.

தாதா பூங்காவாக ஆனந்தராஜ். தாதாத்தனத்துக்கேற்ற ஆஜானுபாகுவான உடல், அவ்வப்போது தனது ஆட்களிடம் காமெடி பஞ்ச் என வழக்கம் போல ரசிக்க வைக்கிறார். ஆனாலும் உடம்பு ரொம்பவே பெருத்துப் போச்சு ஆனந்தராஜ் அண்ணே. கொஞ்சம் கவனிச்சா நல்லாருக்கும்ணே.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

மதறாஸ் மாஃபியா கம்பெனிஐ.பி.எஸ்.அதிகாரி தமிழ் பாரதியாக சம்யுக்தா. லெஃப்ட்..ரைட்…மார்ச்ஃபாஸ்ட் ஸ்டைலில் விரைப்பாக நடக்கிறார். உயரமும் போலீஸ் அதிகாரிக்கு மேட்ச் ஆகுது. ஆனா என்ன ஒண்ணு நாக்குல புண்ணு வந்த மாதிரி படம் முழுக்க டயலாக் பேசுறாரு. ஏம்மா இப்படி?

ஆனந்தராஜின் கம்பெனி ஆளாக முனீஸ்காந்த். தன்னால் முடிஞ்ச வரை சிரிக்க வைக்க முயற்சி பண்ணிருக்காரு. ஆனா எதுவுமே ஒர்க்-அவுட் ஆகல. ஏன்னா சீரியஸான ஸ்கிரிப்டே முக்கால்வாசி சீன்களில் காமெடியாக போய்விட்டது.

ஆனந்தராஜின் முதல் மனைவியாக தீபா சங்கர். வழக்கம் போல, “உள்ளேன் ஐயா..”லெவல் தான். செகண்ட் ஒய்ஃப் சசிலயா, முழங்கால் அளவுக்கு கவுண், கையில் ஒயின் என ஜில் காட்டுகிறார். இவரின் மகளாக வரும் ஆராத்யாவுக்கும் சில சீன்களில் டயலாக் பேசும் நாக்குல புண்ணு வந்துருச்சு போல.

“டமுக்கு டிமுக்கு…டப்பாங்குத்து” போட இருக்கவே இருக்காரு நம்ம அண்ணன் ஸ்ரீகாந்த் தேவா. இருக்கும் ஸ்கிரிப்ட்டுக்கு கொடுத்த வேலைய கச்சிதமா செஞ்சிருக்காரு.

இடைவேளை வரை படம் ஏனோதானோதான்னு போகுது. இடைவேளைக்குப் பிறகு லைட்டா டேக்-அப்பாகி, க்ளைமாக்ஸ் கொஞ்சம் டிஃபெரெண்டா முடிச்சு கவனிக்க வைக்கிறார் டைரக்டர் ஏ.எஸ்.முகுந்தன்.

  —   ஜெடிஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.