எங்களை பிச்சை எடுக்க வச்சிராதீங்க … கதறும் தூய்மைப் பணியாளர்கள் !
மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 11 கிராம பஞ்சாயத்துக்களில் துப்புரவு பணியாளர்களாக பணியாற்றி வந்த 244 தூய்மைப் பணியாளர்களை மாநகராட்சியின் பணியாளர்களாக ஏற்றுக் கொண்டது. ஆனால், ஏற்றுக் கொண்டது முதலாக தற்போது வரையிலான 15 வருட காலமாகவும் சிறப்புகாலமுறை பணியாளர்களாகவே இருந்து வருகிறார்கள். அவர்களை காலமுறை ஊழியர்களாக மாற்றுமாறு கடந்த 15 வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இது தொடர்பான அரசின் பல்வேறு அரசாணைகளை மதுரை மாநகராட்சி புறக்கணித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட துப்புரவு பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் மணிவேல், ”கடந்த15ஆண்டுகளாக மதுரை மாநகராட்சிக்கும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் பலமுறை மனு கொடுத்தோம். இதுவரை நடவடிக்கைகள் இல்லை. எங்களது கோரிக்கை 10 நாளுக்குள் நிறைவேறாத பட்சத்தில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை முன்பு பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெறும்” என்பதாக அறிவித்திருக்கிறார்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.