அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஆய்வுக்கூட்டத்துக்கு எங்களை அழைக்கவில்லை … எதிர்க்கட்சித் துணைத்தலைவர் அதிருப்தி !

திருச்சியில் அடகு நகையை விற்க

மதுரையில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு கூட்டத்திற்கு பிரதான எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை ….

மதுரை மாநகராட்சியில் 200 கோடி வரிமுறைகேடு கனிமவள கொள்ளை இதற்கெல்லாம் என்ன நடவடிக்க எடுக்கப் போகிறீர்கள்.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

அண்ணா அறிவாலயத்தை மீட்டுக் கொடுத்த அம்மாவின் கோவிலுக்கு இடையூறு ஏற்படுத்தலாமா? சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார் உதயநிதி ஸ்டாலினுக்கு கேள்வி…

மதுரையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார் வெளியீட்ட வீடியோ பதிவில் கூறியதாவது,

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

உதயநிதி ஸ்டாலின் விருதுநகர் ஆய்வு கூட்டத்தை முடித்துக் கொண்டு மதுரையில் ஆய்வுக் கூட்டத்தை நடத்துகிறார்.  அதனைத் தொடர்ந்து உசிலம்பட்டி, திருமங்கலம், சோழவந்தான் ஆகிய தொகுதிகளில் வளர்ச்சி பணிகுறித்து ஆய்வை மேற்கொள்கிறார்.

மதுரையில் ஆய்வுக் கூட்டத்தை நடத்தும் உதயநிதி ஸ்டாலின் கூட்டத்திற்கு பிரதான எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடப்படவில்லை. இதனால் மதுரை மாவட்ட வளர்ச்சி தொடர்பான ஆலோசனை கருத்துக்களை நாங்கள் வைக்க முடியாமல் உள்ளோம்.

மதுரை மாநகராட்சியில் எங்கு இல்லாத வகையில் 200 கோடி வரி முறைகேடு நடைபெற்றது நீங்கள் விசாரணை செய்து அது உறுதியானபின் மண்டல தலைவர்கள், மேயர் கணவரை கைது செய்துள்ளீர்கள் இந்த பிரச்சனைக்கு  ஆய்வுக்கூட்டத்தில் நீங்கள் என்ன தீர்வு காண போகிறீர்கள்.

மதுரை மாவட்டத்தில் தரமற்ற பணிகள் ஆளுங்கட்சியால் நடைபெற்று வருகிறது என மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். குறிப்பாக நீங்கள் செல்லும் சோழவந்தான், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளில் கனிமவளங்கள் எல்லை மீறி ஆளுங்கட்சியின் தலையிட்டால் கொள்ளை போகிறது. பொதுமக்கள் போராடி வருகிறார்கள். பிரதான எதிர்க்கட்சியான நாங்களும் சட்டமன்ற மானிய கோரிக்கையில் கூறினோம், அப்போது துறையின் அமைச்சராக இருந்த துரைமுருகன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னார் இதுவரை எடுக்கப்படவில்லை. கனிமவள கொள்ளை தொடர்பாக உங்கள் கவனத்திற்கு அதிகாரிகள் கொண்டு வந்திருப்பார்கள் இது குறித்து நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இன்றைக்கு மதுரை மாவட்டத்திலிருந்து அதிமுகவை சேர்ந்தவர்கள் உங்களிடம் அடைக்கலம் தேடி வந்துள்ளார்கள், அவர்களுக்கு அரசியல் வாழ்வு கொடுப்பது உங்களின் பெருந்தன்மை ஆனால் இன்றைக்கு தொடர்ந்து மூன்று முறை தோல்வி அடைந்தவர் மக்களால் நிராகரிக்கப்பட்டவர் மணிமாறன் மாவட்டச் செயலாளராக உள்ளார். அவரது மாவட்டத்திற்கு திருமங்கலம், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி ஆகிய தொகுதியில் உள்ளது. இந்த மூன்று தொகுதியில் தொடர்ந்து திமுக தோல்வியை தான் சந்தித்து வருகிறது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

உங்கள் உள் கட்சி பிரச்சினையில் தலையீட நான் விரும்பவில்லை. ஆனால் அந்த நபர் நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது உங்க கட்சி செல்வாக்கை வளர்க்க என்ன களப்பணி ஆற்றினார் என்று நீங்கள் ஆய்வு செய்து கொள்ள வேண்டும்.

மேலும் இந்த மூன்று தொகுதிகளில் உள்ள சன்மானங்கள் தனக்கே கிடைக்க வேண்டும் என்று வரம்பு மீறி, அரசியல் நாகரீகம் இல்லாமல் செயல்பட்டு வருகிறார். ஒரு அரசியல் குடும்பத்தில் வந்தவர் என்ற இலக்கணத்தை கூட தாண்டி அதிமுக தாய்ப்பால் குடித்தோம் என்பது மறந்துவிட்டு செயல்படுகிறார்.

குறிப்பாக புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி அம்மாவிற்கு நாங்கள் கோவிலை கட்டி உள்ளோம். அந்த கோவிலில் முன்பாக அதிமுக தொண்டர்கள் சுவர் விளம்பரம் செய்துள்ளார்கள். ஆனால் இன்றைக்கு நீங்கள் வரும் பொழுது அந்த மாவட்ட செயலாளர் தன்னுடைய கழக பணி, மக்கள் பணி, பலவீனமாக இருப்பதை உங்களுக்கு தெரிய வேண்டாம் என்ற காரணத்தால் அதை இரவோடு இரவாக அழித்து அதில் உங்களுக்கு விளம்பரம் எழுதியுள்ளார் .

உதயகுமார்
உதயகுமார்

குறிப்பாக அந்த நபர் தன்னுடைய இயலாமையை மறைப்பதற்காக ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இதுகுறித்து காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை இதன் மூலம் உங்களுக்கு அனுதாபத்தை அந்த நபர் தேட முயற்சிக்கிறார். நாங்களும் எதற்கும் தயாராக உள்ளோம். இருப்பது ஒரு உயிர் அந்த உயிர் வைத்த நாங்கள் வாழ்வது ஆசைப்படவில்லை. இயக்கத்திற்காக, கொள்கைக்காக நாங்கள் உயிரை கொடுக்க தயார், உயிரை விடவும் தயார்.

உங்களுக்கு ஒன்றை கூறிக்கொள்கிறேன் அண்ணா அறிவாலத்தை அம்மாதான் காப்பாற்றி கொடுத்தார். வைகோவிற்கும், உங்கள் தந்தைக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் அறிவாலயத்துக்கு சோதனை வந்தது அதை தாயுள்ளத்தோடு மீட்டி கொடுத்தவர் புரட்சித்தலைவி அம்மா என்பதை நீங்கள் நினைவு கொள்ள வேண்டும். ஆனால் அந்த அம்மா கோயிலுக்கு இன்றைக்கு இடையூரை ஏற்படுத்துகிறார்கள் இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

இன்றைக்கு நீங்கள் ஆய்வு கூட்டத்தில் நடத்தினீர்கள் கடந்த 10 ஆண்டுகளில் புரட்சித்தலைவி அம்மா, எடப்பாடியார் ஆகியோர் ஆட்சியில்  வளர்ச்சி திட்டங்களை நாங்கள் செய்து கொடுத்தோம் . நாங்கள் செய்த திட்டங்களையும், நீங்கள் இந்த நான்கரை ஆண்டுகள் என்ன திட்டம் செய்தீர்கள் என்பதை ஒப்பீடு பார்க்க வேண்டும்.

இன்றைக்கு திருமங்கலம் தொகுதி செக்கானூரணியில்  கள்ளர் விடுதியில்  துயரமான சம்பவம் நடைபெற்று உள்ளது இந்த ஆட்சி நிர்வாகம் எப்படி உள்ளது என்பதற்கு அடையாளமாக உள்ளது என்பதை கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும். சமூக நீதி விடுதி என்று  பெயர் சூட்டினால் மட்டும் போதாது இந்த சம்பவத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என கூறினார்.

 

  —    ஷாகுல், படங்கள் : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.