மளிகை கடையை உடைத்து பணம் திருடி … சிசிடிவி யில் சிக்கிய வாலிபர் !
மதுரை உலகநேரி தங்கமுத்து மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சண்முகம் மகன் கார்த்திக். இவர் வீட்டிற்கு அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் வியாபாரம் முடித்து கடையை அடைத்து சென்றவர் மறுநாள் கடையை திறக்க சென்றார்.
அப்போது கடையின் பூட்டுகள் திறந்து கிடந்தன. கடையில் வியாபாரம் செய்து கல்லாவில் வைத்திருந்த 8 ஆயிரம் பணம் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதனைக் கண்ட கார்த்திக் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். இதனை அறிந்து வந்த மாட்டுத்தாவணி போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகள் பதிவுகளை ஆய்வு செய்தனர்.

பின்னர் அடையாளம் தெரிந்து திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். திருடிய நபர் நெல்பேட்டை மீன் மார்க்கெட் நாகூர் தோப்புவைச் சேர்ந்த அபுதாஹீர் மகன் சல்மான்கான் என்ற விபரம் தெரிந்து சல்மான் கானை மாட்டுத்தாவணி போலீசார் கைது செய்தனர். மளிகை கடையில் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்