மதுரை காமராஜர் பல்கலைகழகமா ‘காம’ ராசாக்களின் கூடாரமா? வீடியோ !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மதுரை காமராஜர் பல்கலைகழகமா ‘காம’ ராசாக்களின் கூடாரமா?

அடுத்தடுத்து இரண்டு பேராசிரியர்கள் பாலியல் புகாரில் கைது; பல்கலை விடுதியில் கல்லூரி மாணவி மர்ம மரணம்; அதிரடியாக ஊழியர்கள் சிலர் பணிநீக்கம்; ஊழியர்களுக்கு சம்பள பாக்கி என பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கிறது, மதுரை காமராஜர் பல்கலைகழகம்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

1966ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாரம்பரிய மிக்க, இப்பல்கலையில் 72 பாடப்பிரிவுகளுடன் நாற்பதுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இப்பல்கலையின் கீழ் நூற்றுக்கு மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. விடுதலைப்போராட்டவீரரும், தமிழறிஞ ருமான தெ.பொ. மீனாட்சிசுந்தரம் தான் இப்பல்கலையின் முதல் துணைவேந்தராக பணியாற்றியவர். இப்பல்கலையின் முன்னாள் மாணவர்கள் இன்று பல்வேறு துறை சார் வல்லுநர்களாகவும்; போலீசு அதிகாரிகளாகவும்; அரசு உயர் அதிகாரிகளாகவும் உயர்ந்து இப்பல்கலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இத்தகைய பாரம்பரியமும் பெருமையையும் கொண்ட, காமராஜர் பல்கலையில்தான் தொடர்ச்சியான பாலியல் குற்றச்சாட்டுகள்.

வீடியோ லிங்

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

 

மதுரை காமராஜர் பல்கலைகழகம்.
மதுரை காமராஜர் பல்கலைகழகம்.

கடந்த மார்ச் மாதத்தில் வரலாற்றுத்துறை பேராசிரியர் சண்முகராஜா மீது பாலியல் குற்றச்சாட்டு மற்றும் சாதிரீதியாக மாணவிகளை இழிவுபடுத்தியக் குற்றச் சாட்டின் அடிப்படையில் வன்கொடுமைத்தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் மாத இறுதியில் உளவியல்துறைத் தலைவர் பேராசிரியர் கருப்பையா பாலியல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார். குறிப்பாக, பேராசிரியர்கள் கருப்பையாவின் பாலியல் சீண்டல்களை குறிப்பிட்டு புகார் அளித்த பின்னும் பல்கலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையில், தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க், மற்றும் டி.ஐ.ஜி. பொன்னியிடமும் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்துள்ளனர். அதன் பின்னரே, சமயநல்லூர் மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு, பேராசிரியர் கருப்பையாவை கைது செய்திருக்கிறார்கள்.

வீடியோ லிங்

மதுரை காமராஜர் பல்கலைகழகம்.
மதுரை காமராஜர் பல்கலைகழகம்.

‘’சண்முகராஜாவும், கருப்பையாவும் சும்மா சாம்பிள் தான். இன்னும் வெளி வராத சங்கதிகள் நிறைய கொட்டிக்கிடக்கிறது. பாதாளம் வரைக்கும் பணம் புகுந்து விளையாடுது. சாதி ரீதியான டார்ச்சர் சகஜமாக நடக்குது. சமீபத்தில், தேனியைச் சேர்ந்த மகேஸ்வரி என்ற மாணவி பல்கலை விடுதி மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்து போனார். அதுவே இன்னும் மர்மமா இருக்கு.’’ என ஆதங்கப்படுகிறார், பெயர் வெளியிட விரும்பாத மதுரையைச் சேர்ந்த ஒருவர்.

பேராசிரியர் கருப்பையா -
பேராசிரியர் கருப்பையா –

இவ்விவகாரம் தொடர்பாக, மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் காளமேகம் அவர்களை சந்தித்து பேசினோம். ‘’கடந்த சில ஆண்டுகளாகவே மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பாலியல் சீண்டல் புகார் எழுந்து வருகிறது. பேராசிரியர் நிர்மலாதேவி தொடங்கி தற்போது வரை இதுபோன்று பல்வேறு பாலியல் புகார் எழுந்து வரகாரணம் தான் என்ன ?அங்கு என்ன தான் நடக்கிறது? சாதிரீதியான பாரபட்சம் காட்டப்படுவதாகவும் சொல்கிறார்கள். இது குறித்து தமிழகஅரசு உயர்மட்டகுழுஒன்றை அமைத்து தீவிரவிசாரணை மேற்கொள்ள வேண்டும். இங்கு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பை தமிழக அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும்.’’ என்றார்.

வீடியோ லிங்

இந்திய மாதர் சங்க தேசிய சம்மேளன மாநில தலைவர் ராஜலட்சுமி,“மாதா பிதா குரு தெய்வம் என்று சொல்கிறார்கள். கல்விகற்றுதரும் அந்த குருவிற்கான தகுதி ஆசிரியர்களிடம் கிடையாது. நான் எல்லோரையும் சொல்லவில்லை குறிப்பாக சில ஆசிரியர்கள் மட்டும் இப்படி நடந்து கொள்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த நிர்மலாதேவியின் பாலியல்கதை, இன்று வரை ஓய்வில்லாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மாணவிகளுக்கு ஜாதிரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் தொந்தரவு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

பேராசிரியர் சண்முகராஜா
பேராசிரியர் சண்முகராஜா

இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு மாத ஊதியம் சரிவர கொடுப்பதில்லை. இதற்காக எங்களது மாதர் சங்கத்தின் சார்பாக நாங்கள் பலமுறை கூறியும் பல்கலைக்கழகதுணைவேந்தர் செவிசாய்க்கவில்லை. இப்போது இருக்கும் துணைவேந்தர் புதிதாக பதவி ஏற்றவுடனே, இங்கு பணிபுரிந்து வந்த ஊழியர்கள் சிலரை பணிநீக்கம் செய்தார். அதற்கான காரணம் இன்று வரை தெரியவில்லை. தமிழகத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பெண்களுக்கு பாதுகாப்பு இருந்தது. பெண்கள் மீது கைவைப்பவர்கள் மீது வெளிநாடுகள் போல் தண்டனை கொடுக்க வேண்டும். ஒவ்வொரு வகுப்பறையிலும் சிசிடிவி கேமரா வைக்க வேண்டும்.’’ என்றார் அவர்.

விடுதி மாணவி தேனி மகேஸ்வரி
விடுதி மாணவி தேனி மகேஸ்வரி

மேலும், ‘’யாராக இருந்தாலும் எதிர்த்துக் கேள்விக் கேட்கக்கூடியவரான அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், காமராஜர் பல்கலை சிண்டிகேட் உறுப்பினராக தேர்வாகியிருக்கிறார். கடந்த 15 வருடங்களாக இல்லாத அளவிற்கு பல்கலையின் உறுப்புக்கல்லூரி பேராசிரியர்கள் பெரும்பான்மையோர் வாக்களித்து அவரை தேர்வு செய்திருக்கிறார்கள். விரைவில் பல்கலைக்கழகத்தில் நல்லது நடக்கும் எனஎதிர்பார்க்கிறோம்.’’ என்ற நம்பிக்கையோடு முடித்தார்.

வீடியோ லிங்

துணைவேந்தர் குமார்
துணைவேந்தர் குமார்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் அவர்களை , நீண்ட முயற்சிகளுக்குப் பிறகு நேரில் சந்தித்தோம். நாம் முன் வைத்த கேள்விகள் அனைத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்ட துணைவேந்தர், ‘’இந்த விசயத்தை முறையாக விசாரித்து அதற்கான பதிலை விரைவில் தருகிறேன்.’’ என்றார். காமராஜர் பல்கலைக் கழகத்தின் சிண்டிகேட் மெம்பராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வரும் அமெரிக்கன் கல்லூரி முதல்வருமான தவமணி கிறிஸ்டோபரின் கவனத்திற்கும் கொண்டு சென்றோம். ‘’நான் இப்போது தான் சிண்டிகேட் மெம்பராக வந்துள்ளேன்.

இந்திய மாதர் சங்க மதுரை மாவட்ட செயலாளர் ராஜலெட்சுமி
இந்திய மாதர் சங்க மதுரை மாவட்ட செயலாளர் ராஜலெட்சுமி

துணைவேந்தரிடம் ஆலோசித்து, முதலில் புகார்களின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்யவும்; அதன் பின்னர் குற்றமிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க என்னால் முடிந்த முயற்சிகளையும் நிச்சயம் செய்வேன்.’’ என்றார் நம்பிக்கையாக. ஏற்கெனவே, ‘’பணம் கட்டினால் பாஸ்’’ என்ற செய்தியை அங்குசத்தில் வெளியிட்டிருந்தோம். தற்போது, பாலியல் குற்றச்சாட்டு வெளியாகியிருக்கிறது.

சமூக ஆர்வலர் காளமேகம்
சமூக ஆர்வலர் காளமேகம்

மாணவிகளின் எண்களை வாங்கிக்கொண்டு, சாப்பிட்டியா, தூங்கிட்டியா என்று நலம் விசாரிப்பதை போல ஆரம்பித்து அடுத்தடுத்து ஆபாசமாக பேசிய பேராசிரியர் ஒருவரின் லீலைகள் ஸ்கிரீன் ஷாட்களாக சந்தி சிரிக்க காத்திருக்கிறது, என்கிறார்கள். வெளியில் சொன்னால் அசிங்கம்; கல்லூரி நிர்வாகத்திற்கு சொன்னால் கண்டு கொள்வதில்லை; போலீசுக்கு போக பயம்; மீறி புகார் கொடுத்தால் பல முனைகளிலிருந்து புகாரை வாபஸ் வாங்கு என்ற அழுத்தம் … இந்த விவகாரத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது புரியாமல் பாதிக்கப்பட்ட மாணவிகள் தவித்து வருவதாக சொல்கிறார்கள்.

தவமணி கிறிஸ்டோபர்
தவமணி கிறிஸ்டோபர்

அங்குசம் செய்தியாளர் குழுவும் இதுகுறித்து விசாரணையில் களம் இறங்கியுள்ளது.அடுத்தடுத்த வாரங்களில் பகீர் தகவல்கள் வெளியாகும் பிரச்சினையின் தீவிரம் கருதி, தமிழக அரசும் உயர்கல்வித்துறையும் தலையிட்டு, சுதந்திரமான ஒரு விசாரணைக்குழுவை அமைத்தால் பல உண்மைகள் அம்பலமாகும் என்கிறார்கள். கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் இயங்கும் பல்கலையில் பேராசிரியர்களாக உலவும் ‘’காம’’ ராசாக்கள் கண்டறிந்து களையெடுக்கப்படுவார்களா?

– ஷாகுல், படங்கள் : ஆனந்த்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.