மதுரைக்கு வந்த சோதனை! கலக்கத்தில் ஆசிரியர்கள்!
மதுரைக்கு வந்த சோதனை! கலக்கத்தில் ஆசிரியர்கள்!
பேராசிரியர்களின் பாலியல் குற்றச்சாட்டு தொடங்கி, பணியாளர்களுக்கு சம்பளப்பட்டுவாடா செய்ய துட்டு இல்லாமல் தடுமாறுவது வரையில் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கித் தவிக்கிறது, மதுரை காமராஜர் பல்கலை கழகம்.
பழைய பல்லவியோடு புதிய பல்லவியாக பணத்தை வாங்கிக்கொண்டு மதிப்பெண்களை திருத்தி வழங்கிய குற்றச்சாட்டும் தற்போது சேர்ந்திருக்கிறது.
இப்பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதி உள்ள நிலையில், தேர்வில் தோல்வியை தழுவியவர்கள் மற்றும் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மறுமதிப்பீட்டிற்காக விண்ணப்பிப்பது வழக்கமான நடைமுறை.
இவ்வாறு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு தாள் ஒன்றுக்கு ஐயாயிரம் முதல் பேரம் பேசி பணம் பெற்று கொண்டு மதிப்பெண்களை வாரி வழங்கியிருக்கின்றனர்.
இந்த முறைகேட்டில் பல்கலைகழகத்தின் ஊழியர்கள் தொடங்கி பேராசிரியர்கள் வரையில் பலருக்கும் தொடர்பிருப்பதாக சொல்கிறார்கள். இது ஒருபுறமிருக்க, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் தனித்தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்பெண்கள் பட்டியலில் குளறுபடி இருப்பதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலிருந்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட தகவல் சூட்டை கிளப்பியிருக்கிறது.
லோக்கல் போலீசுக்கு போன புகார், மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு சென்று இறுதியாக சிபிசிஐடி போலீசாரின் கைகளுக்கு சென்றிருப்பதாக தகவல். அந்தளவுக்கு விவகாரம் இருப்பதாக சொல்கிறார்கள்.
-ஷாகுல்