மதுரை மீனாட்சியம்மன் கோவில் அஷ்டமி சப்பர விழா ! பெண் பக்தர்கள் மட்டுமே கூடி இழுத்த தேர்பவனி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

லகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் மார்கழி மாதத்தில், உலகில் உள்ள அனைத்து ஜீவராசிக்கும் இறைவன் படி அளக்கும் லீலையை குறிக்கும் வகையில் நடைபெறும் அஷ்டமி சப்பர விழா பிரசிதிபெற்றதாகும். மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி நாளான டிச-22  சுவாமிக்கும் அம்மனும் அதிகாலை  பல்வேறு சிறப்பு பூஜை அபிஷேக அலங்காரம் நடைபெற்றது.

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

இதனையடுத்து கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடனும், மீனாட்சியம்மன் தனி தனி சப்பரங்களில் எழுந்தருளினர்.

அஷ்டமி சப்பர விழா
அஷ்டமி சப்பர விழா

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

சிவனடியார்கள் கயிலாய வாத்தியம் முழங்க கீழமாசியில் வீதியில் புறப்பாடாகிய சப்பரமானது; யானைக்கல், கீழ வெளி வீதி, தெற்குவெளிவீதி, மேலவெளிவீதி, வக்கீல் புதுத்தெரு வழியாக  வலம் வந்து மீண்டும் கோவிலுக்கு வந்தடையும் .இந்த அஷ்டமி சப்பர திருவிழாவில் மீனாட்சியம்மன் எழுந்தருளியுள்ள சப்பரத்தை பெண் பக்தர்கள் மட்டுமே வடத்தினை பிடித்து இழுத்துசெல்வது தனிச்சிறப்பாகும்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அஷ்டமி சப்பர விழா
அஷ்டமி சப்பர விழா

நான்கு வெளி வீதிகளிலும் சப்பரத்தில் வலம் வந்த சுவாமி அம்மனை வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்துவருகின்றனர். சப்பரத்தின் முன்பாக சிவாச்சாரியார்கள் அரிசியை தூவியபடி செல்லும்போது கீழே சிதறிக்கிடந்த அரிசியைக் கூடியிருந்த பக்தர்கள் எடுத்துக் கொண்டு வீடுகளுக்குச் செல்வர். இந்த அரிசியை வீட்டில் வைத்து வேண்டிக்கொண்டால், நோய் நொடி நீங்கி பசிப்பணி நீங்கும் என்பது நம்பிக்கை.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மதுரையில் வாழ்ந்து அஷ்டமி பிரதட்சிணம் செய்வோர்க்குத் துன்பம் நீங்கி முக்தி கிடைப்பது உறுதி என்றும் இறைவன் சிவன் கூறியதை நிகழ்த்தும் வகையிலான நடைபெறும். இந்த அஷ்டமி சப்பர விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிநெடுகிலும் சாமி தரிசனம் செய்தனர்.

 

—  ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.