தூய்மை(யற்ற) பட்டியலில் முதலிடம் பிடித்த தூங்கா நகரம் !
தூய்மையற்ற மாநகரப்பட்டியலில் மதுரை மாநகராட்சி முதலிடம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மதுரை மாநகராட்சி ஆணையருக்கு வாழ்த்துமடல் மற்றும் பட்டு சால்வையை தபால் அனுப்பிய சமூக ஆர்வலர்….
2025ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் 10 தூய்மையற்ற நகரங்கள் பட்டியலை மத்திய அரசின் Swachh Survekshan வெளியிட்டுள்ளது. மதுரை மாநகராட்சி முதல் இடத்தையும், லூதியானா 2 -ம் இடத்தையும், சென்னை 3-ம் இடத்தை பெற்றுள்ளது. வரி முறைகேடு, மேயர், மண்டலத்தலைவர்கள் ராஜினாமா என பல்வேறு ஆளுங்கட்சி கவுன்சிலர் பிரச்சனைகளால் ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் இந்தியாவிலேயே தூய்மையற்ற மாநகரமாக மதுரை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது மதுரை மக்களிடையே கவலையை ஏற்படுத்தியது. இந்நிலையில்மாநகராட்சி நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் நூதன முறையில் மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சங்கர பாண்டியன் என்பவர் மதுரை மாநகராட்சி ஆணையருக்கு மன்னர்கள் ஆட்சிகாலத்தில் வழங்குவது போன்ற வாழ்த்து மடலையும், பட்டு சால்வையும் தபால் மூலமாக அனுப்பி வைத்தார்.
அந்த வாழ்த்து மடலுடன் மதுரை மாநகரில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதை ஆணையரின் கவனத்திற்கு எடுத்துச்சொல்லும் வகையில் குப்பைகள் மற்றும் பாதாள சாக்கடையை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியே செல்வது போன்ற புகைப்படங்களையும் தபால்மூலமாக அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து பேசிய சங்கர பாண்டியன்…
மதுரை மாநகராட்சி தூய்மையற்ற நகரங்களில் முதலாவது இடம் பிடித்ததற்காக கண்டனத்தை பதிவு செய்யும் வகையில் வாழ்த்து மடலையும் சால்வையையும் அனுப்பி வைத்துள்ளேன். மதுரை மாநகராட்சி நிர்வாகம் ஊழல் செய்வதிலயே கவனம் செலுத்துவதன் காரணமாக மதுரை சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயத்தில் உள்ளதாகவும், மத்திய அரசு ஆய்வில் அடிப்படையில் வெளிப்பட்டுள்ள இந்த பட்டியலை கருத்தில் கொண்டாவது இனிவரும் காலங்களில் சுகாதாரத்திற்கு மதுரை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய முக்கியத்துவம் அளித்து மதுரைக்கு ஏற்பட்ட அவப்பெயரை அகற்ற முன்வர வேண்டும் என்றார்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.