தெலுங்கர்கள் குறித்த சர்ச்சை பேச்சு ! நடிகை கஸ்தூரிக்கு எதிராக மதுரை போலீசில் புகார் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ந்து மக்கள் கட்சியின் சார்பில் கடந்த நவம்பர்-03 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்துகொண்டு, தெலுங்கர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.

பிராமணர்களுக்கு பாதுகாப்பு கோரியும், பிராமணர்களை இழிவுபடுத்துவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரியும் நடத்தப்பட்ட அந்த ஆர்ப்பாட்டத்தில், தெலுங்கு பேசும் மக்களை இழிவாக கருததக்க வகையில் சர்ச்சையான கருத்துக்களை பேசியிருந்தார் நடிகை கஸ்தூரி.

Sri Kumaran Mini HAll Trichy

அவரது சர்ச்சைக்குரிய பேச்சுக்கு எதிராக பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இதனையடுத்து, தான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை என்பதாக, ஊடகத்தினரை சந்தித்து விளக்கமும் அளித்திருந்தார். ஆனாலும், அவர் அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய சர்ச்சைக்குரிய வீடியோ வைரலாகி வருகிறது.

Flats in Trichy for Sale

இந்நிலையில், நடிகை கஸ்தூரி தெலுங்கர்கள் சமூகத்தினரை அவதூறாக பேசியதாக கூறி தமிழ்நாடு நாயுடு மகா ஜனசபை மற்றும் தமிழக நாயுடு சங்கம் என பல்வேறு அமைப்பை சேர்ந்த  நிர்வாகிகள் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதனிடம் நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

தொடர்ந்து நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்கிற பட்சத்தில் வருகின்ற நவ., 10-ம் தேதி மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் அமைந்துள்ள மன்னர் திருமலை நாயக்கர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்தப்படும் என்பதாக தெரிவித்துள்ளனர்.

இதேபோன்ற கோரிக்கைகளுடன் தமிழகம் முழுவதுமே பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், எந்நேரமும் நடிகை கஸ்தூரி மீது வழக்கு பாயலாம் என்பதாக போலீசு வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.

 

— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.