கோரிக்கை மனு வழங்கிய பொது மக்கள் … தீர்வு காண உறுதியளித்த டாக்டா் சரவணன் !
மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட பந்தல்குடி மற்றும் மீனாட்சிபுரம் அம்பேத்கர் காலணி பகுதிகளில் 5,000-க்கும் மேற்பட்ட பட்டியல் சமூக மக்கள் வசித்து வருகின்றனர், பந்தல்குடி வாய்கால் ஓரங்களிலும், வாடகை வீடுகளிலும் வசித்து வரக்கூடிய இம்மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பது இவர்களது நீண்ட நாள் கோரிக்கையாகும்.
சமீபத்தில் முதலமைசர் மு.க.ஸ்டாலின் ஒரு இலட்சம் பேருக்கு பட்டா வழங்கிய நிகழ்வில்கூட இவர்களில் ஒருவருக்குகூட வீட்டு மனை பட்டா வழங்கவில்லை. அத்துடன் ஏற்கனவே கடந்த 30ஆண்டுகளுக்கு முன் இலவச வீட்டுமனை பட்டாக்களை பெற்றவர்கள் இப்போது அதனை தங்களது பெயரில் பத்திரம் பதிவதற்கு 11% முத்திரை மற்றும் பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது என்றும், பட்டியலின மக்களின் வறுமை நிலையை கணக்கில் கொண்டு இந்த பதிவுக்கட்டணத்தில் சலுகை வேண்டும் எனவும் தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.
இதனையடுத்து மேற்கண்ட கோரிக்கைகளை கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களுக்கு கொண்டு செல்லும் நோக்கத்தோடு இன்று அப்பகுதி பொதுமக்கள் கழக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் நேரில் சந்தித்து தங்களுடைய கோரிக்கை மற்றும் சிரமங்களையும் தெரிவித்தனர். அவர்களது கோரிக்கைகளை கவனமுடன் கேட்டுக்கொண்ட அவர் ஏழை எளிய பட்டியல் சமூக மக்களின் கோரிக்கைகளை எடப்பாடியாரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய தீர்வு காண இயன்ற உதவிகளை செய்வதாக தெரிவித்தார்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.