மதுரை ரயில் நிலைய தூய்மைப் பணிக்கு பொறுப்பேற்ற தொழில் வர்த்தக சங்கம் !
மதுரை இரயில் நிலையத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ரயில் நிலைய வளாகங்களை சுத்தமாக வைத்திருக்க ரயில்வே நிர்வாகம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு உறுதுணையாக மதுரை ரயில் நிலைய வளாகத்தை பயணிகள் சுத்தமாக வைத்திருக்க மதுரை தொழில் வர்த்தக சங்கம் 20 பிளாஸ்டிக் குப்பைத் தொட்டிகள் வழங்கி உள்ளது.
மட்கும் குப்பைகள் போட10 தொட்டிகளும், மட்காத குப்பைகள் போட 10 குப்பை தொட்டிகளும் வழங்கப்பட்டது. இவற்றை மதுரை ரயில்வே பகுதி வர்த்தக ஆய்வாளர் மணிகண்டனிடம் மதுரை தொழில் வர்த்தக சங்க செயலாளர் ஸ்ரீதர், உதவி தலைவர் செல்வம், உதவி செயலாளர்கள் சத்யம் செந்தில், ஃபார்மா கணேசன் ஆகியோர் வழங்கினர். தொழில் வர்த்தக சங்கத்திற்கு மதுரை ரயில் நிலைய சுகாதார ஆய்வாளர் சுந்தரராமன் நன்றி தெரிவித்தார்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்ந