மகளிர் விடியல் பயண புதிய பேருந்து துவக்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி .
திருச்சிராப்பள்ளி மாவட்டம் சத்திரம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் ( லிமிடெட்) திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் சார்பில் ஒரு மகளிர் விடியல் பயண புதிய பேருந்து மற்றும் நான்கு புதிய புறநகரப் பேருந்துகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் 14/06/2025 கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர்.மு. மதிவாணன் மாநகராட்சி துணை மேயர். திவ்யா, திருச்சிராப்பள்ளி மண்டல பொது மேலாளர் D.சதீஷ்குமார் , துணை மேலாளர்கள் த .சாமிநாதன், ரவி, போக்குவரத்து கழக பணியாளர்கள் ,தொழிற்சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இன்று இயக்கப்பட்ட பேருந்துகள் செல்லும் வழித்தடம்
1.மகளிர் விடியல் பயணம் பேருந்து
நகரப் பேருந்து
மத்திய பேருந்து நிலையத்திலிருந்து , திருவரம்பூர் என் ஐ டி வழியாக துவாக்குடி
புறநகர் பேருந்து
- திருச்சியில் இருந்து விராலிமலை துவரங்குறிச்சி வழியாக மதுரை
- திருச்சியில் இருந்து விராலிமலை துவரங்குறிச்சி வழியாக மதுரை
- திருச்சியில் இருந்து திண்டுக்கல் தேனி வழியாக கம்பம்
- மணப்பாறையில் இருந்து திருச்சி கரூர் வழியாக திருப்பூர்