பனியினால் உறையும் அதிசய கிராமம்!
நார்வேயின் ட்ரோண்டெலாக் கவுண்டியில் உள்ள ஹெல் என்ற ஒரு சிறிய கிராமம். அங்கு சுமார் 1500 மக்கள் அமைதியான சமூகமாக வசித்து வருகின்றனர். இந்த கிராமம் ஒவ்வொரு குளிர்காலத்திலும் முற்றிலும் உறை பனியினால் உறைந்து விடுகிறதாம். அதாவது இங்கு சுமார் −25°C வரை வெப்பநிலை குறைந்து, முழு கிராமமும் பனியில் மூழ்கி விடுகிறது. “ஹெல் ஃப்ரீசஸ் ஓவர்” என்ற ஆங்கில பழமொழி இங்கு உண்மையாகிறது.
“ஹெல்” என்ற பெயர் பண்டைய நோர்ஸ் மொழியின் “ஹெலிர்” என்பதிலிருந்து வந்தது, அதாவது “குகை” அல்லது “குகை மூடி” என்று அர்த்தம். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் “ஹெல் ஸ்டேஷன்” என்ற ரயில் நிலையத்தில் நின்று புகைப்படங்கள் எடுக்கின்றனர். அதில் “Gods-expedition” என்று எழுதியிருக்கும், அது நார்வேயில் “சரக்கு அனுப்பும் பிரிவு” என்று அர்த்தம், ஆனால் ஆங்கிலத்தில் அது பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இந்த கிராமம் ட்ரோன்ட்ஹீம் விமான நிலையத்துக்கு அருகில் இருப்பதால், பயணிகளுக்கு அதை பார்க்க எளிது. குளிர்காலத்தில் முழு பனி மூடிய தெருக்கள் மிகவும் அழகாக இருக்கும். ஹெல் மக்கள் தங்கள் கிராம பெயரை பற்றி பயணிகள் நகைச்சுவையுடன் பேசுவதைக் கொண்டாடுகின்றனர். அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் “Blues in Hell” என்ற ப்ளூஸ் இசை விழாவையும் நடத்துகின்றனர். அந்த விழா நார்வேயின் சிறந்த இசை விழாக்களில் ஒன்றாக இருக்கிறது. பனியில் மூழ்கிய அந்த சூழலில் இசை ஒலிகள் மிகவும் அழகாக ஒலிக்கின்றன.
“ஹெல்” கிராமத்தின் பெயர் பயண சந்தையில் ஒரு பெரிய அதிர்வை உண்டாக்கியுள்ளது. “Sent from Hell” என்ற முத்திரையுடன் அஞ்சல் அட்டைகள் வாங்குவது பயணிகளுக்கு விசித்திர அனுபவமாக மாறியுள்ளது. குளிர்கால வெப்பநிலை மாற்றங்கள் மூலம் குளிமாற்றத்தின் பாதிப்பையும் அறிவியலாளர்கள் இங்கு ஆய்வு செய்கின்றனர். இது ஆர்க்டிக் சூழல் மாற்றங்களின் உண்மையான குறிப்பாகும். மொத்தத்தில், நார்வேயின் “ஹெல்” கிராமம் ஒரு பழமொழியை உண்மையாக்கிய அற்புத இடம். ஒவ்வொரு குளிர்காலத்திலும் இங்கு “ஹெல் ஃப்ரீசஸ் ஓவர்” என்பது உண்மை ஆகிறது.
— மு. குபேரன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.