சத்ரு சம்ஹார மூர்த்தி கோவிலில் மகாபரணி குருபூஜை வழிபாடு !
துறையூர் சத்ரு சம்ஹார மூர்த்தி கோவிலில் மகாபரணி குருபூஜை வழிபாடு. திரளான பக்தர்கள் பங்கேற்றனர் !
திருச்சி மாவட்டம் துறையூர் திருச்சி ரோட்டில் உள்ள தீயணைப்பு நிலைய வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி கோவிலில் மகா பரணி குருபூஜை விழா நடைபெற்றது.
இதில் துறையூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்சத்ர சம்ஹார மூர்த்தி கோவிலில் மாதம்தோறும் அவரது ஜென்ம நட்சத்திரமான பரணி நட்சத்திரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
வருடம் தோறும் வருகின்ற புரட்டாசி மாதத்தில் வருகின்ற பரணி நட்சத்திரத்தைமகாபாரணி குருபூஜை விழாவாக பக்தர்கள் வழிபடுவது விளக்கம் அதன்படி துறையூர் தீயணைப்பு நிலைய வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சத்ரு சம்ஹாரமூர்த்திக்கு கோமாதா வழிபாட்டுடன் துவங்கிய மகாபரணிகுரு பூஜை விழாவில் தொடர்ந்து கணபதி ஹோமம், சத்ருசம்ஹார ஹோமம், தன்வந்திரி ஹோமம், சுதர்சன ஹோமம் உள்ளிட்ட சிறப்பு யாகவேள்விகள் மற்றும் சிறப்புஅபிஷேகங்களும் பூர்ணாஹூதி செய்யப்பட்டு அதனைத் தொடர்ந்து மூலவரான சத்ருசம்ஹாரமூர்த்தி சுவாமிக்கு பால், திருமஞ்சனம், தேன் , இளநீர்,பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று மூலவருக்கு வஸ்திரம் சாற்றப்பட்டு வர்ணமாலைகளால் அலங்காரம் செய்து மகாதீபாராதனை நடைபெற்றது.
இந்த வழிபாட்டில் கலந்து கொண்ட சுமார் 1500 -க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாலை உற்சவர் சத்ரு சம்ஹார மூர்த்தியை அலங்காரம் செய்து கோவில் உள்பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மகாபரணி குரு பூஜையில் துறையூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சத்ரு சம்கார மூர்த்தியை பக்தியுடன் வழிபட்டனர் மகாபரணி குரு பூஜை வழிபாட்டிற்கான சிறப்பு ஏற்பாடுகளை துறையூர் தீயணைப்பு நிலைய அலுவலர்கள், வீரர்கள் மற்றும் உபயதாரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
– ஜோஸ்