கேள்வி கேட்ட விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலாளர் தலைமறைவு !
விருதுநகர் அருகே கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்ட விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலாளர் தலைமறைவு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிள்ளையார் குளம் ஊராட்சியில் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.இந்த கிராம சபை கூட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி மன்ற தலைவர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது, அப்போது வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த அம்மையப்பன் என்ற விவசாயி கிராம சபை கூட்டமானது வார்டு சுழற்சி முறையில் நடக்க வேண்டும்.
அவ்வாறுதான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளது ஏன் நீங்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் கிராம சபை கூட்டம் நடத்தி வருகிறீர்கள், இதனால் சுற்றி உள்ள பொதுமக்கள் கலந்து கொள்ள முடியாமல் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து நிறைவேற்ற முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள், என கேள்வி எழுப்பவே இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கள் வைத்துள்ள கோரிக்கையை மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
பின்னர் பேசிய விவசாயி அம்மையப்பன் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி இப்பொழுது இருக்கின்ற ஊராட்சி செயலாளர் மீது ஊழல் புகாருக்கு ஆளாகி இவர் மீது மாவட்ட நிர்வாகம் பணியிட மாற்றம் செய்துள்ளது, ஆனால் இவர் தொடர்ந்து இதே கிராமத்தில் எதற்கு பணியாற்றி வருகிறார், இவர் மீது நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பவே ஆத்திரமான ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியன் நேராக அம்மையப்பன் மார்பில் மீது எட்டி உதைத்து சரமாரியாக தாக்கி தகாத வார்த்தைகள் திட்டி உள்ளார்.
உடன் ஊராட்சி செயலாளரின் ஆதரவாளரும் சேர்ந்து விவசாயி அம்மையப்பனை தாக்கியுள்ளனர். உடனடியாக அதிகாரிகளும் பொதுமக்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் செய்தனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் நமக்கு எதற்கு வம்பு என உடனே இடத்தை காலி செய்து கிளம்பி விட்டார்,
பின்னர் விவசாயி அம்மையப்பன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார், விவசாயி அம்மையப்பன் அளித்த புகாரின் பேரில் ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியன் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துறையினர் ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியனை தேடி வருகின்றனர். இந்த நிலையில் விவசாயி தாக்கிய ஊராட்சி செயலாளரை மாவட்ட நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட விவசாயி அம்மையப்பனை நேரில் சந்தித்து தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கம் சார்பில் மாநிலத் துணை தலைவர் ராமசுப்பு, மற்றும் விருதுநகர் மாவட்டச் செயலாளர் கே. பி .எஸ். கண்ணன், ஆகியோர் ஆறுதல் கூறி நிவாரண தொகை வழங்கினார்கள்,
பின்னர் பேசிய தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்களின் சங்க விருதுநகர் மாவட்ட செயலாளர் கே.பி.எஸ். கண்ணன் கூறியதாவது விவசாயி அம்மையப்பனை தாக்கிய ஊராட்சி செயலாளர், வேறொரு அமைப்பில் இருந்தாலும், இவர் செய்த செயல் ஒட்டு மொத்த ஊராட்சி செயலாளர்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது , இவர் செய்த செய்தல் கன்னடத்துக்குரியது உடனடியாக அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தார்.