டால்மியா சிமெண்ட் ஆலையில் தேசிய சாலை பாதுகாப்பு நிறைவு விழா !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே டால்மியா சிமெண்ட் ஆலையில் தேசிய சாலை பாதுகாப்பு நிறைவு விழா டால்மியா மக்கள் மன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவிற்கு டால்மியா செயல் இயக்குனர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். சாலை பாதுகாப்பு குழும தலைவர் பி.என்.சுரேஷ், பொதுமேலாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இனிய ரமலான் வாழ்த்துகள்

விழாவில் அனைவரும் சாலை பாதுகாப்பு குறித்து உறுதிமொழி ஏற்றனர்.தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கருத்துரைகள், குறுநாடகங்கள்,பாடல்கள் நடைபெற்றது.

தேசிய சாலை பாதுகாப்பு நிறைவு விழா

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

தேசிய சாலை பாதுகாப்பு நிறைவு விழா

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

பின்னர் இந்திய அளவில் சாலை விதிகள் மற்றும் பாதுகாப்பு முறைகளை பயன்படுத்தியவர்களில்  டால்மியா சிமெண்ட் ஆலை ஒப்பந்த கனரக வாகன  ஐந்து ஓட்டுநர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஆலை ஒப்பந்த ஓட்டுநர்கள் சுமார் 700 பேருக்கு தொடர்ந்து 7வது  ஆண்டாக பாதுகாப்பு காப்பீடு செய்யப்பட்டதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

விழாவில் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன்  கலந்து கொண்டு ஆலை மூலம் கடந்த 30 நாட்களாக சாலை பாதுகாப்பு குறித்து பேச்சு, ரங்கோலிகோலம், நாடகம்,குறியீடு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெற்ற தொழிலாளர்கள், லாரி ஓட்டுநர்கள், ஒப்பந்த பணியாளர்கள், டால்மியா மேல்நிலைப்பள்ளி, வித்யா மந்திர் பள்ளி மற்றும் ராமகிருஷ்ணா தொழில் பயிற்சி நிலைய மாணவ மாணவிகள், மகளிர் மன்றத்தினர் உள்ளிட்டோருக்கு பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார். இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு குறும்படம் காண்பிக்கப்பட்டது.

சாலை பாதுகாப்பு குறித்து நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் வழங்குகினார்.

தேசிய சாலை பாதுகாப்பு நிறைவு விழாவிழாவில் ஆலை உயர் அதிகாரிகள்  பொது மேலாளர் ஐ. சுப்பையா, உதவி்பொது மேலாளர் ரமேஷ்பாபு டால்மியா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மனோகரன்,வித்யாமந்திர் பள்ளி முதல்வர் மதுபிரஸ்சில்லா, தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் மணிமாறன், பழனியப்பன்  உள்ளிட்ட போக்குவரத்து காவல்துறையினர், சிமெண்ட் ஆலை பணியாளர்கள்,பள்ளி மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்ற அனைவரையும் ஆலை பாதுகாப்பு பொதுமேலாளர் துரைராஜ் வரவேற்றார். முடிவில் சிமெண்ட் ஆலை அலுவலர் பவுல்ராஜ்  நன்றி கூறினார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.