கோவில்பட்டி – மகாகவி பாரதியார் பிறந்த தின ஓவிய போட்டி – ஏராளமான பள்ளி மாணவர்கள் பங்கேற்பு !
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பில் மகாகவி பாரதியார் பிறந்த தின ஓவிய போட்டி முத்தானந்தபுரம் தெருவில் உள்ள கொண்டயராஜு ஓவிய பயிற்சி பள்ளியில் நடந்தது. இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நாட்டின் விடுதலைக்காக தனது புரட்சி எழுத்துக்கள் மூலம் விடுதலை எழுச்சியூட்டிய எட்டயபுரத்து முண்டாசு கவிஞன் மகாகவி பாரதியின் பிறந்த தினம் டிச-11ம்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மகாகவி பாரதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவிய போட்டி நடைபெற்றது.
கொண்டையராஜீ ஓவிய பயிற்சி பள்ளியில் நடைபெற்ற போட்டியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பாரதியின் படத்திற்கு வண்ணம் தீட்டியும், பாரதியின் உருவத்தை ஓவியமாக வரைந்தனர் .
ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர் டாக்டர் சம்பத்குமார் கலந்துகொண்டு ஓவிய போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் கொண்டயராஜு ஓவிய பயிற்சி பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
— மணிபாரதி.