திருச்சியில் மகாத்மா காந்தி தபால் தலை கண்காட்சி !
மகாத்மா காந்தியின் 156 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி ரயில்வே சந்திப்பு பிரதான நுழைவாயில் முன்பு மகாத்மா காந்தி அஞ்சல் தலை கண்காட்சி நடைபெற்றது.
தென்னக ரயில்வே திருச்சிராப்பள்ளி கோட்டை மேலாளர் அன்பழகன் கண்காட்சியினை திறந்து வைத்து மகாத்மா காந்தி புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி காட்சிப்படுத்தியுள்ள அஞ்சல் தலை மற்றும் கை ராட்டையை பார்வையிட்டார்.
மகாத்மா காந்தி அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் ஜலால், யோகா ஆசிரியர் விஜயகுமார், பத்ரி நாராயணன், இளம்வழுதி, குணசேகரன், தாமோதரன் உள்ளிட்டோர் 1869 – 1948 மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறு, அகிம்சை வழிகளை எடுத்துரைக்கும் வகையில் பொது பயன்பாடு, நினைவார்த்த அஞ்சல் தலை, மினியேச்சர், செட் அ நெட், புகைப்பட அஞ்சல் அட்டை உட்பட இந்திய அஞ்சல் துறை மற்றும் உலக நாடுகள் அஞ்சல் துறையினர் வெளியிட்ட அஞ்சல் தலைகள், முதல் நாள் உறைகள், சிறப்பு உறைகள் காட்சிப்படுத்தப்பட்டன. கண்காட்சியினை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கண்டு களித்தனர்.
தகவல் : யோகா ஆசிரியர் விஜயகுமார்.