எல்ரெட் குமார்+ சூரி கூட்டணியின்’ மண்டாடி ‘ ஆரம்பம்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட்,  எல்ரெட் குமார் தனது 16வது தயாரிப்பாக, கதையின் நாயகனாக சூரி நடிக்கும் ‘மண்டாடி’  படத்தை ஆரம்பித்துள்ளார் . ஆபத்து மிகுந்த பாய்மரப் படகுப் போட்டி தான் கதை. இராமேஸ்வரம் கடல் பகுதி தான் கதைக் களம்.

இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக இருந்து ‘செல்ஃபி’ என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டைப் பெற்ற இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இப்படத்தை எழுதி இயக்குகிறார். கதாநாயகியாக மஹிமா நம்பியார் நடிக்கிறார்.  தெலுங்கு நடிகர் சுஹாஸ் இங்கே அறிமுகமாகிறார்.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

எல்ரெட் குமார்
எல்ரெட் குமார்

மிகவும் முக்கியமான கேரக்டரில் சத்யராஜ் மற்றும் ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் ஆகியோர் கமிட்டாகியுள்ளார். நிகழ்சியின் ஆரம்பமாக அனைவரையும் வரவேற்றுப் பேசினார் தயாரிப்பாளர் எல்ரெட் குமார். ‘மண்டாடி’ யை எப்போது, எப்படி ஆரம்பித்தோம், இதற்கு காரணகர்த்தா யார்? படத்தில் பங்குபெற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களை பெருமிதத்துடன் நினைவு கூர்ந்தார் எல்ரெட். படத்தின் சிறப்பம்சம் குறித்து சத்யராஜ் பேசிய வீடியோ திரையிடப்பட்ட பின்  பேசிய

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி

“ எனது கனவைப் புரிந்து கொண்டு, என் கதையை கேட்டு இந்த வாய்ப்பை அளித்த எல்ரெட் சார் மற்றும் எனது ஆசான் வெற்றிமாறன் சார் ஆகியோருக்கு  மனமார்ந்த நன்றி.. சூரி அண்ணன் காமெடியனாக இருந்து கதாநாயகனாக உயர்ந்த அவரின் நடிப்பு என்னை வெகுவாக கவர்ந்தது. அவருக்கென்று எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே  நெகிழ்ச்சியாக இருந்தது. சூரியின்  விஷன், அவர் கதை தேர்ந்தெடுக்கும் விதம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.  ‘மண்டாடி’ படம் அவருடைய நடிப்பு வாழ்க்கையில் ஒரு முக்கியமான படமாக அமையும். மேலும் இந்தக் கதாபாத்திரத்திற்கு வெறும் நடிப்பு மட்டும் போதாது. கூடவே ஒரு நடிகரின் உடல் மற்றும் மன வலிமையும் அதிகம் தேவைப்பட்டது. அதை சூரி  போன்றவர்களால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும்.

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி

வெற்றிமாறன்  சார் படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசராக இருப்பது எனக்கு  வழிகாட்டுகிறது. ஜி.வி. பிரகாஷ் இசையும், எஸ்.ஆர். கதிரின் ஒளிப்பதிவும் சேர்ந்து, உண்மையான உணர்வுகளைத் தரும் விளையாட்டு ஆக்‌ஷன் படமாக உருவாகிக்கொண்டு வருகிறது.” என்றார்.

தொழில்நுட்பக்குழு

இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்,

ஒளிப்பதிவு: எஸ்.ஆர். கதிர் ISC,

கலை இயக்கம்: டி.ஆர்.கே. கிரண்,

எடிட்டிங்: பிரதீப் ஈ. ராகவ்,

ஆக்‌ஷன்: பீட்டர் ஹெய்ன்

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

வி.எஃப்எக்ஸ்: ஆர். ஹரிஹரசுதன்

இணை தயாரிப்பு: வி. மணிகண்டன்,

மேக்கப்: என். சக்திவேல்

காஸ்ட்யூம்: நாகு,

டி.ஐ.: கிளெமெண்ட்,

ஸ்டில்: ஜி. ஆனந்த் குமார்,

தயாரிப்பு நிர்வாகி: எஸ்.பி. சொக்கலிங்கம்,

பி.ஆர்.ஓ: ரேகா

' மண்டாடி ' ‘மண்டாடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏப்ரல் 19ஆம் தேதி இரவு ஊடகங்களின் முன்னிலையில் மிக விமர்சையாக வெளியிடப்பட்டது. இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் முடிந்த கையோடு ஷூட்டிங் லொகேஷனுக்காக  ராமேஸ்வரத்தைச் சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளில் முகாமிட்டுள்ளது படக்குழு.

‘மண்டாடி’ படக்குழுவால் தயாரிக்கப்பட்ட பாய்மரப் படகுப் பந்தய உலகம் குறித்த ஒரு ஆவண வீடியோவும் மீடியாக்களுக்காக ஸ்பெஷலாக திரையிடப்பட்டது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஜி.வி. பிரகாஷ் குமார்,
ஜி.வி. பிரகாஷ் குமார்,

கடலில் காற்றையும், அலையையும், கடல் நீரோட்டத்தையும் நன்கு கணித்து, மீன்களின் வரத்தையும் அவற்றின் திசைவழிப் போக்கையும் பற்றிய நல்ல அறிவையும்  அனுபவத்தையும் பெற்ற ஒருவர், மீன்பிடிக்கச் செல்லும்போது படகை வழிநடத்தக்கூடிய தலைமை நிலையில் இருப்பார். அவரையே இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் மண்டாடி என்று அழைக்கின்றனர்.

மீன்பிடிக்கப் போகும் போது படகையும் உடன் வரும் மீனவர்களையும் வழிநடத்துவதைப் போல,பாய்மரப் படகுப் போட்டியின் போதும் வழிநடத்தக்கூடியவர் மண்டாடி.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.