பறவைகள் பலவிதம் .. ஆற்றல் பிரவீன்குமார் – புதிய தொடர் ஆரம்பம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ங்குசம் வாசகர்களுக்கு ஏற்கெனவே பரிச்சயமான ”வனங்களின் வழியே தடங்களைத் தேடி காட்டுயிர் பயணம்!” என்ற தலைப்பில், அங்குசம் இதழில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்த கட்டுரையாளர் ஆற்றல். பிரவீண் குமாரின் அடுத்த முயற்சியாக இந்த தொடர் வெளியாகிறது.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை பூர்வீகமாக கொண்டவர். வேலூர் வி.ஐ.டி. பல்கலை கழகத்தில் எம்.டெக். (பயோடெக்னாலஜி) மற்றும் எம்.பி.ஏ. நிறைவு செய்திருக்கிறார். சூழல் செயல்பாட்டாளர், கதை சொல்லி, யானை ஆராய்ச்சியாளர், சுட்டியானை சிறுவர் இதழ் ஆசிரியர் என பன்முகம் கொண்டவர்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

ஆற்றல் பிரவீன்குமாா்
ஆற்றல் பிரவீன்குமாா்

கடந்த 8 ஆண்டுகளாக குழந்தைகள் சார்ந்தும் யானைகள் மற்றும் பறவைகள் சார்ந்தும், இயங்கி வருகிறார். யானை மனித எதிர்கொள்ளல் இருக்கும் இடங்களை கண்டறிந்து அங்குள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை முன்வைத்து அரசு அமைப்புடன் சேர்ந்து இயங்கி வருகிறார். கடந்த ஆண்டின் சிறந்த சூழலியலாளர் விருதை இவருக்கு கொடுத்து கவுரவித்துள்ளது.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

பறவைகள் ஏன் முக்கியம்?

1, பறவைகள் மகரந்த சேர்க்கை செய்து தாவரங்கள் பெருகச் செய்கின்றன.

2,பயிர்களை அரித்து நாசம் செய்யும் பூச்சிகளை தின்று பயிர்களைக் காக்கின்றன.

3, விதைகளை உண்டு எச்சத்தின் வழியே வறண்ட நிலங்களிலும் மரங்களை மலர்த்து கின்றன.

4,வேட்டையாடும் பறவைகளால் சிற்றுயிர்களின் பெருக்கம் கட்டுக்குள் இருக்கின்றன.

5, இறந்ததை உண்ணும் பறவைகளால் இயற்கை தூய்மை செய்யப்பட்டு தொற்றுக்கள் வராமல் தடுக்கப்படுகின்றன.

இதன் பொருட்டு நாம் பறவைகளைப் பாதுகாக்க வேண்டும்!

  • நாகணவாய் (மைனா) இல்லாது போனால் வெட்டுக்கிளிகள் பெருகும்.

  • ஆந்தைகள் அழிந்தால் எலிகளுக்கு கொண்டாட்டம்.

  • கருச்சாண் குருவி காணாமல் போனால் பூச்சிகளின் ஆட்சி தொடங்கிவிடும் .

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

பறவைகளை, ரத்தத்தின் ரத்தமாய், உடன் பிறப்பாய், தோழமையாய் பாவித்து தான் பாரதி “காக்கை குருவி எங்கள் சாதி ” என்று பாடியிருப்பார் போலும்…

மனிதர்கள், கிளிப்பேச்சு கேட்கவும் குயிலிசையில் கிறங்கவும் மயிலசைவில் மயக்கவும் இயற்கை பறவைகளைப் படைக்கவில்லை!

பறவைகள் ப்லவிதம்
பறவைகள் ப்லவிதம்

பறவைகளுக்கும், தாவரங்களுக்குமிடையே ஓர் நுட்பமான உணவுச்சங்கிலி ஊடாடுவதை உணர்வதும், உணர்த்துவதுமே “சூழலியல் ” பறவைகள் உண்டு எச்சத்தின் வழியே வெளியேறும் விதைகள்தாம் முளைக்கும். பறவைகள் அழிந்தால் தாவரங்களும் அழியும்!

மனிதர்களால் மரங்களை நட்டு வளர்க்க முடியும்! மகரந்த சேர்க்கை செய்ய முடியாது..!

பூஞ்சை, புல், பூண்டு, செடி, மரம் என்று தாவரத்தொகுதியின் வளர்ச்சிக்கு பங்களிப்பவை பறவைகள்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

“மனிதர்கள் இல்லாத உலகில் பறவைகள் வாழ்ந்து விடும். பறவைகள் இல்லாத உலகில் மனிதர்களால் வாழ முடியாது ” என்று ஐம்பது வருட ஆய்விற்குப் பிறகு நமக்கு அறிவுறுத்தினார் ” சாலிம் அலி ”

பசுமையைப் போல பறவைகளையும் பரவச் செய்வோம்!

குளிரூட்டப் பட்ட அறைகளை விடவும் … தென்றல் உலாவும் தெருக்களை நமது குழந்தைகளுக்கு விட்டு வைப்போம்!

(தொடரும்)

 

—   ஆற்றல் பிரவீன்குமார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.