Sorry to all.. “என் முடிவிலாவது நம்பியவர்களுக்கு பணம் கிடைக்கட்டும்” – செல்பி தற்கொலை ! அதிர்ச்சியில் IFS முதலீட்டாளர்கள். ! அடுத்து MARC…..
Sorry to all.. “என் முடிவிலாவது நம்பியவர்களுக்கு பணம் கிடைக்கட்டும்” – செல்பி தற்கொலை ! அதிர்ச்சியில் IFS முதலீட்டாளர்கள். ! அடுத்து MARC…..
வேலூர் மாவட்டம் காட்பாடியை தலைமையிடமாக ‘இன்டர்நேஷ்னல் பைனான்சியல் சர்வீசஸ்’ (IFS) என்ற பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், அரக்கோணம், ஆற்காடு என தமிழகம் முழுவதும் 21 இடங்களில் கிளை உள்ளது. இந்த நிறுவனம், எங்கள் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதாமாதம் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வட்டி தருவோம் என்று அறிவித்தது.
இதை நம்பி, தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர், இன்டர்நேஷ்னல் பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தனர். விளம்பரத்தில் கூறியபடி, முதல் 2 மாதங்கள் மட்டும் ரூ.1 லட்சம் முதலீட்டுக்கு மாத வட்டியாக ரூ.8 ஆயிரம் தந்துள்ளனர். அதன் பிறகு வட்டி கொடுப்பதில் பிரச்னை ஏற்பட்டது. அதைதொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதேநேரம், காவல் துறையில் பணியாற்றும் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்து ஏமாந்ததும் தெரியவந்தது.
IFC -சில் ரூ.50 லட்சத்துக்கு மேல் முதலீடு செய்திருந்த காட்பாடி சேவூர் கிராமத்தைச் சேர்ந்த வீர ராகவன் என்பவரின் மகனும் ஏஜென்ட்டுமான வினோத்குமார் நேற்றிரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இவர், ரூ.1 லட்சத்துக்கு 8 ஆயிரம் ரூபாய் வட்டித் தருவதாகக் கூறி நண்பர்கள், உறவினர்கள் என பலரிடம் பணம் வசூலித்து, IFS -சில் கொடுத்திருக்கிறார்.
இரண்டு மாதங்களாக IFS சில் இருந்து பணம் கொடுக்கப்படாததால், முதலீட்டாளர்களிடம் பதில் சொல்ல முடியாமல் தவித்திருக்கிறார். இந்தச் சூழலில் IFC சகோதரர்கள் தலைமறைவு, பொருளாதாரக் குற்றப்பிரிவு ரெய்டு என அடுத்தடுத்து தகவல்கள் வந்ததால், மன உளைச்சலுக்கு ஆளான வினோத்குமார் தனது உயிரை மாய்த்து கொண்டதாக காவல் துறை தரப்பில் சொல்கிறார்கள்.
தற்கொலைக்கு முன்பு வினோத்குமார் கைப்பட கடிதம் ஒன்றையும் எழுதி வைத்திருக்கிறார். அந்தக் கடிதத்தில், ‘‘லட்சுமி நாராயணன், மோகன் பாபு, வேத நாராயணன், ஜனார்த்தனன் மற்றும் டீம் லீடர் (ஏஜென்ட்) டெல்லி பாபு ஆகியோரின் பெயரில் இயங்கும் IFS நிறுவனத்தில், பலரது பணத்தை நானும் முதலீடு செய்து இருக்கிறேன். இப்போது, இவர்கள் இல்லை என்பதால் என்னைச் சார்ந்தவர்களின் பணத்தை வாங்கி கொடுக்கும்படி விசாரணை நடத்தும் துறையிடம் கேட்டுக்கொள்கிறேன். நான் கொடுத்தப் பணத்துக்கான ஆவணங்கள் அனைத்தும் என் ஆன்லைன் புக்கில் உள்ளது. என்னை நம்பியவர்களுக்கு எனது முடிவிலாது பணம் கிடைக்கட்டும். சாரி டு ஆல்..! டாக்குமென்ட்ஸ் என்னுடைய பேக்கில் இருக்கிறது. போலீஸ் கண்டுபிடித்து, அனைவரின் பணத்தையும் வாங்கித்தர வேண்டும்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த கடிதத்தை வினோத்குமார் தான் எழுதினார் என்பதற்கான ஆதாரமாக தற்கொலைக்கு முன்பு அந்த கடிதத்துடன் அவர் செல்ஃபி புகைப்படம் ஒன்றையும் தனது செல்போனில் எடுத்திருக்கிறார். இவற்றையெல்லாம் கைப்பற்றியிருக்கும் திருவலம் (காட்பாடி) போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு IFS நிதி நிறுவனத்துக்கு சொந்தமான 21 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இன்டர்நேஷ்னல் பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்திற்கு சொந்தமான வேலூர், காஞ்சிபுரம், அரக்கோணம், ஆற்காடு, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 21 இடங்களில் நேற்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.குறிப்பாக, ஐஎப்எஸ் நிதி நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான வேலூர் சத்துவாச்சாரி பேஸ்-1 பகுதியில் வசித்து வரும் ஜனார்த்தனன் வீட்டில் வேலூர் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி கணநேசன் தலைமையில் சோதனை நடந்தது. இந்த சோதனையில் வீட்டில் இருந்த ஆவணங்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல் காட்பாடியில் உள்ள நிதிநிறுவனத்தின் தலைமை அலுவலகத்திலும் சோதனை நடந்தது. மேலும், நிதி நிறுவனத்தின் முக்கிய ஏஜென்ட் சுகுமாருக்கு சொந்தமான சத்துவாச்சாரி அடுத்த செங்காநத்தம் வீட்டிலும் சோதனை நடந்தது. அதேபோல், காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரி அருகில் உள்ள மின்மினி சரவணன் என்பவர் வீடு உட்பட 3 இடங்களில் காஞ்சிபுரம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள் கைப்பற்றினர்.
சென்னையை பொருத்தவரையில், நுங்கம்பாக்கம் நட்சத்திர ஓட்டல் அருகே உ ள்ள சசி டவர் என்ற கட்டிடத்தில் இயங்கி வரும் இன்டர்நேஷ்னல் பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம், கிண்டி தாமரை டெக் பார்க் கட்டிடத்தில் இயங்கி வந்த அலுவலகத்திலும் சோதனை நடந்தது. இந்த சோதனையில் பொதுமக்களிடம் இருந்து பல கோடி ரூபாய் பெற்றதற்கான ஒப்பந்த பத்திரங்கள் கட்டுக்கட்டாக கைபற்றப்பட்டுள்ளது. மேலும், பல கோடி ரூபாய் பணம், தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆய்வுக்கு பிறகே நிதி நிறுவனம் எத்தனை கோடி மோசடி செய்துள்ளது என்று தெரியவரும்.
லட்சுமி நாராயணன் புதுயுகம் தொலைகாட்சியில் ஷேர் மார்கெட், மற்றும் நிதி ஆலோசகராக தொடர்ந்து பேசி இருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.
இந்த நிதி நிறுவனத்தின் குழும தலைவர்கள் லட்சுமி நாராயணன், ஜனார்த்தனம் தலைமையில் MARC என்கிற பிசினஸ்மேன்களுக்கான ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்தி இருக்கிறார்கள். இது கொரானா காலகட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது வேலூர், காஞ்சிபுரம், சென்னை, செய்யாறு, மதுரை, திருநெல்வேலி, குழுக்களின் எண்ணிக்கை பெரிய அளவில் வளர்ந்து உள்ளது.
இந்த குழுவில் அந்த அந்த மாவட்டத்தில் உள்ள பிசினஸ்மேன்களை இணைக்கிறார்கள். ஒருவர் ஒரு வருடத்திற்கு ரூபாய் 43,000 கட்ட வேண்டும். ஒரு குழுவில் 50 பேர் வைத்துக்கொள்ளலாம், தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்து 3 குழுக்களை அமைத்து இருக்கிறார்கள். ஒரு குழு மூலம் 21, 50,000, என 3 குழுக்கள் என்றால் 64 இலட்த்திற்கு மேல்.. இதே போல். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊடுறுவி இருக்கிறார்கள்.
MARC என்கிற அமைப்பை பெரிய பிஸ்னஸ் மேன்களிடம் பிரபலப்படுத்துவதற்கு விஜய் டிவியில் காமெடி நடிகர்களை கொண்டு நட்சத்திர கிக்கெட், பட்டிமன்றம், இசைக்கச்சேரிகளுக்கு இலட்ச கணக்கில் ஸ்பான்சர் செய்கிறார். இதனால் முழுமுனைப்போடு பல பேர் இணைந்து இருக்கிறார்கள். இனி இந்த அமைப்பின் செயல்பாடுகள், எப்படி இருக்கிற போகிறது என்கிற பீதியில் இருக்கிறார்கள் பிசினஸ்மேன்கள்..
குழும தலைவர்கள் லட்சுமி நாராயணன், ஜனார்த்தனம் , இவர்கள் இரண்டு பேரின் பின்புலத்தில் தேசிய கட்சி தலைவரின் ஒருவரின் மகன் இருப்பதாகவும் அவர் பெயரை J என்று தன் செல்போனில் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள் என்று உள் நிலவரங்களை அறிந்தவர்கள் கிசுகிசுக்கிறார்கள்..