குளித்தலையில் கிராம உதவியாளரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த தந்தை, மகன். தந்தை கைது.
குளித்தலையில் கிராம உதவியாளரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த தந்தை, மகன்.
தந்தை கைது.
கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டவாறு ஒரு லட்சத்து 90 ஆயிரம் கன அடி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால்,
பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 07.08.2022 அன்று தடையை மீறி, குளிப்பதற்காக கோவை நேதாஜி வீதியைச் சேர்ந்த தந்தை சுப்ரமணியன் (58). மகன் மரப் பட்டறையில் வேலை செய்யும் கோபாலகிருஷ்ணன் ( 33). ஆகிய இருவரும் தடையை மீறி குளிப்பதற்காக சென்றுள்ளனர்.
அவர்களை கிராம நிர்வாக உதவியாளர் ரத்தினசாமி தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை மகன் இருவரும் கிராம உதவியாளரை தாக்கி கெட்ட வார்த்தையால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததோடு, அங்கு உள்ள பேரிகார்டை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதாக கிராம நிர்வாக உதவியாளர் ரத்தினசாமி குளித்தலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன், வழக்கு பதிவு செய்து தந்தை சுப்பிரமணியை கைது செய்தார். மகன் கோபாலகிருஷ்ணனை தேடி வருகிறார்.
– நௌசாத்