திருச்சியில் 15000/- மதிப்புள்ள 250 கிலோ இரும்பு கம்பிகள் திருடிய திருடர்கள் !

0

திருச்சியில் 15000/- மதிப்புள்ள 250 கிலோ இரும்பு கம்பிகள் திருடிய திருடர்கள் !

 

திருச்சியில் ரூபாய் 15000/- மதிப்புள்ள 250 கிலோ இரும்பு கம்பிகள் திருட்டுபோனது தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி பஞ்சப்பூரில் உள்ள எல்.என்.டி  நிறுவனத்தின் பணிகளுக்கான குழாய்கள் மற்றும் இரும்பு கம்பிகள் சாலையோரம் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அங்கிருந்து 250 கிலோ எடை கொண்ட இரும்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

கம்பி திருட்டு குறித்து தினேஷ் என்பவர் எடமலைப்பட்டிபுதூர் போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி, இந்த சம்பவம் தொடர்பாக மணிகண்டம் பகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி (வயது 22) மற்றும் 16 வயது சிறுவன் அஜெய் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 16 வயது சிறுவன் காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லையில் உள்ள சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்க பட்டார்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.