பூட்டியே கிடக்கும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் ! காத்துக் கிடக்கும் அவலம்

0

பூட்டியே கிடக்கும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் ! காத்துக் கிடக்கும் அவலம்

 

பூட்டியே கிடக்கும் சிவாயம் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம். பொதுமக்கள் காத்துக் கிடக்கும் அவலம். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், சிவாயம் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் இரும்பூதி பட்டியில், சிவாயம் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் உள்ளது.

இங்கு கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் அன்புராஜ். இவர் அலுவலகத்திற்கு வராததால் அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. இதனால் கிராம நிர்வாக அலுவலக அலுவலகத்திற்கு அலுவல் வேலையாக வரும் பொதுமக்கள் அலுவலகத்தில் நீண்ட நேரம் காத்துக் கிடக்கும் அவலம் உள்ளது. இதனால் விவசாயிகள், மாணவர்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் உள்ள தகவல் பலகையில் எந்த தகவலையும் பதிவு செய்வது இல்லை. எனவே சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அன்புராஜ் அலுவலக நேரத்தில் அலுவலகத்தில் இருந்து பணியாற்ற , மாவட்ட வருவாய் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.