வாழ்க்கையை ரசித்தால் உனக்குள் மாற்றம் ! – மாரி செல்வராஜ்
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் துறை மாணவர்களுக்கிடையேயான இன்டெப் 2025 நுண்கலை விழா நடைபெற்று வருகிறது. கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல் அவர்களின் ஆசீரோடு தொடங்கிய இவ்விழாவின் தொடக்கத்தில் துணை முதல்வர் அருள்முனைவர் அருளானந்தம் வரவேற்புரையாற்றினார்.
கல்லூரிச் செயலர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர், சே.ச. வாழ்த்துரை வழங்கினார். இணை முதல்வர் முனைவர் த.குமார், ஆசிரியர் சங்கத் தலைவர் முனைவர் டாம்னிக், அலுவலகர்கள் சங்கத் தலைவர் சேவியர் இளங்கோ ஜோதி, மாணவர் பேரவைத் தலைவா் ஆசிக் டோனி மற்றும் மாணவர் பேரவை குழு உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி முதல்வர் அருள்முனைவர் சி.மரியதாஸ், சே.ச. வாழ்த்துரையாற்றினார். தம் வாழ்த்துரையில் கல்வி மட்டுமல்லாது அனைத்துத் துறைகளிலும் மாணவர்கள் ஒருங்கிணைந்த வளர்ச்சி பெற வேண்டும் என்கிற நோக்கில்தான் இந்த விழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. வெற்றி தோல்வி முக்கியமல்ல. கடந்த நாட்களில் சிறப்பான பயிற்சி எடுத்து இன்று அரங்கிற்கு வந்துள்ள மாணவர்களுக்கும், உற்சாகப்படுத்த வருகை தந்துள்ள மாணவர்களுக்கும் தம்முடைய வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகப் பதிவு செய்தார்.
திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தனது அனுபவங்களையும், கலை உள்ளம் படைத்தவர்களாக உருவாக மாணவர்கள் எவ்வாறு பலப்பட வேண்டும் என்பது குறித்தும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். முத்தாய்ப்பாக உனது வாழ்க்கையை ரசித்தால் உனக்குள் மாற்றம் ஏற்படும் என எடுத்துரைத்தது மாணவர் இன்றைய பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது.
தொடக்க விழாவிற்கு பிறகு பாரம்பரிய நடனம், நாட்டுப்புற நடனம், மேற்கத்திய நடனம், தமிழ் மற்றும் ஆங்கிலப் பேச்சுப் போட்டிகள், விளம்பர உருவாக்கம், மிமிக்கிரி உள்ளிட்ட பல போட்டிகள் பல்வேறு அரங்கங்களில் நடைபெறுகின்ற.
இரண்டு நாள்களாக நடைபெறும் இவ்விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வில் வெள்ளித்திரை மற்றும் சின்னத் துறையில் சிறப்புறப் பங்கேற்றுகிற கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் பங்கேற்று சிறப்பு நிகழ்வுகளை வழங்க இருக்கின்றனர். நிறைவு விழாவில் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், கலக்கப்போவது யாரு பாலா ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கிச் சிறப்புரையாற்றுகிறனர். இன்டெப் 2025 நிகழ்வை கல்லூரி நுண்கலைக்குழு ஆலோசகர் அருள்முனைவர் அருளானந்தம், ஒருங்கிணைப்பாளர் முனைவர் விமல் ஜெரால்டு, முனைவர் கா.ஜான் கென்னடி உள்ளிட்ட பேராசிரியர்கள், மாணவர் பேரவையுடன் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கின்றனர்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.