விரைவில் வருகிறாள் ‘மரியா’
கன்னியாஸ்திரி ஆன பின்பும் கூட ஒரு சாராசரிப் பெண்ணாக வாழ ஆசைப்படுவளின் கதை தான் இந்த ‘மரியா’. ‘டார்க் ஆர்ட்ஸ் எண்டெர்டெய்ன்மெண்ட்’ பேனரில் ஹரி கே.சுதன் தயாரித்து இயக்கியுள்ளார். புதுமுகம் சாய்ஸ்ரீ பிரபாகரன் கன்னியாஸ்திரியாக நடித்துள்ளார். பாவெல் நவகீதன், சித்து குமரசேன், விக்னேஷ், ரவி சுதா புஷ்பா ஆகியோர் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு சென்னையிலும் சிதம்பரத்திலும் நடந்துள்ளது. இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் இத்தாலி, லண்டன், மலேசியா ஆகிய நாடுகளிலும் நடந்த திரைப்பட விழாக்களில் சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த இசை என பல்வேறு விருதுகளைக் குவித்துள்ளாள் ‘மரியா’.
விருது விழாக்களைத் தொடர்ந்து, தியேட்டர்களிலும் இப்படம் விரைவில் ரிலீசாகிறது. தியேட்டர் வினியோகம் & சேட்டிலைட் ரைட்சை ஹரி உத்ரா புரொடக்ஷன் வாங்கியுள்ளது.
— மதுரை மாறன்