அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சாதனை பெண் மேரி கியூரி!

திருச்சியில் அடகு நகையை விற்க

விஞ்ஞானமும் மனிதத்துவமும் சந்திக்கும் இடத்தில் நிற்கும் ஒரு பேரறிஞராக இருந்தார் மேரி கியூரி. 1867 நவம்பர் 7 அன்று போலந்தின் வார்சா நகரில் பிறந்த இந்த சிறுமி, ஒருநாள் இரண்டு நோபல் பரிசுகளைக் வென்ற உலகின் முதல் பெண்ணாக வருவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

ஆனால், கனவுக்கு முன் தடைகள் வந்தாலும், கனவை விட்டுவிடாத மனமே வரலாற்றை எழுதும் என்பதை அவர் நிரூபித்தார்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

மேரி கியூரி
மேரி கியூரி

பெண்கள் பல்கலைக்கழகத்தில் சேர முடியாத காலத்தில், அவரின் கல்வி ஆர்வம் தடுக்கப்படவில்லை. வசதியின்றிக் கூட, பாரிசின் சார்போன் பல்கலைக்கழகத்தில் பசி, குளிர், சோர்வு எதையும் பொருட்படுத்தாமல் படித்தார். இயற்பியலிலும் கணிதத்திலும் துல்லியப் பட்டங்கள் பெற்றார்.

Admission Enquiry Form

அதன்பின், வாழ்க்கை துணையும் அறிவியல் இணையருமான பியரி கியூரியை சந்தித்தார். இருவரும் சேர்ந்து உலகைப் பதறவைத்த கண்டுபிடிப்பைச் செய்தனர்.

பொலோனியம் மற்றும் ரேடியம். இதுவே “கதிரியக்கம்” (Radioactivity) என்ற சொல்லை உருவாக்கியது.

இரண்டு நோபல் பரிசுகள் அவருக்கே உரியது

  1. 1903  பியரி கியூரி மற்றும் ஹென்றி பெக்குரலுடன் சேர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசு

2. 1911 ரேடியம் மற்றும் பொலோனியம் கண்டுபிடிப்புக்காக வேதியியலுக்கான நோபல் பரிசு

இன்றளவும் இரண்டு வெவ்வேறு துறைகளில் நோபல் பரிசு பெற்ற ஒரே பெண் மேரி கியூரி தான்.

மேரி கியூரிபோர்க்களத்தில் காயமடைந்த வீரர்களுக்காக, ரேடியம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி “சிறிய எக்ஸ்-ரே வண்டிகள்” (Little Curies) உருவாக்கி, போரின் நடுவே மருத்துவ உதவி சென்றடைந்தது.

அறிவியல் மனித வாழ்க்கைக்காகவும் பணியாற்ற முடியும் என்பதை உலகுக்கு கற்றுக் கொடுத்தார்.

அவரின் இறுதிச் சவாலும்…

கதிரியக்கப் பொருட்களுடன் நீண்ட காலம் பணிபுரிந்ததால், அவர் எலும்பு மஜ்ஜை பாதிப்பால் (Aplastic Anemia) 1934ல் உயிரிழந்தார்.

அர்த்தமுள்ள ஐரனியா அவர் கண்டுபிடித்த கதிரியக்கத் தொழில்நுட்பம், இன்று புற்றுநோயை சிகிச்சை செய்ய பயன்படுத்தப்படுகிறது!

மேரி – பியரி தம்பதிகளின் மூத்த மகள் ஐரின் ஜோலியோட் கியூரி, பின்னர் தன் தாயைப் போலவே அறிவியலில் செயல்பட்டு, 1935-ல் செயற்கை கதிரியக்கத்தை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

அதாவது, ஒரே குடும்பத்தில் தாய், தந்தை, மகள், மருமகன் என நான்கு பேர் நோபல் பரிசு! இது உலக வரலாற்றிலேயே தனித்த சாதனை.

நவம்பர் 7 – புற்றுநோய் விழிப்புணர்வு நாள்.

மேரி கியூரியின் ஆய்வுக் குறிப்புகள், நோட்டுப் புத்தகங்கள், மேசைகள், ஆய்வு கருவிகள் இன்னும் கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றைத் தொட்டால் கூட பாதுகாப்பு உடை அணிய வேண்டும்.

அது அவர் ஜீவனை முழுவதும், உடம்பை முழுவதும், மனதை முழுவதும் அறிவியலுக்கே அர்ப்பணித்தார் என்பதை காட்டுகிறது.

மேரி கியூரியை நினைவுகொள்ள மட்டும் அல்ல…

அவர் உயிரைத் தியாகம் செய்து கண்டுபிடித்த அறிவியல், நம்மை இன்னும் நோய்களிலிருந்து காப்பாற்றி வருகின்றது என்பதை நினைவுகூரும் நாள்.

இந்த நாளில், நாம் செய்ய வேண்டியது புற்றுநோய் விழிப்புணர்வு பரப்புதல். ஆரம்ப சோதனை பழக்கத்தைக் கூறுதல்.

ஆரோக்கியமான வாழ்க்கை மரபுகளை ஊக்குவித்தல்.

ஏனெனில், புற்றுநோய் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் குணமாக முடியும்.

மேரி கியூரி, பெண்களுக்கு மட்டுமல்ல, மனிதகுலத்திற்கே ஒரு ஒளிக்கனல்.

அறிவியலால் வாழ்ந்தவர்…

அறிவியலுக்காகவே உயிர் தந்தவர்…

1995ல், மேரி கியூரியின் மண்ணறை பிரான்சின் பாந்தியான் நினைவாலயத்துக்கு மாற்றப்பட்டது.

அது நாட்டு வீரர்கள், சிந்தனையாளர்கள், மறுமலர்ச்சி மகத்துவம் பெற்றவர்கள் தங்கும் இடம்.

அங்கு தன் சாதனைகளுக்காக நுழைந்த முதல் பெண் மேரி கியூரி.

அது உலகம் முழுக்கச் சொல்வது: பெண்ணாகப் பிறப்பது தடையல்ல, அது ஒரு சக்தி.

—    மதுமிதா

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.