ஜனவரி 9 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது ‘மாஸ்க்’
கவின் மற்றும் ஆண்ட்ரியா ஜெரெமையா நடிப்பில், சமீபத்தில் தியேட்டர்களில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற, ஆக்சன்-த்ரில்லர் படமான ‘மாஸ்க்’-ஐ 2026 ஜனவரி 09-முதல் தனது ஓடிடி பிளாட்ஃபார்மில் ஸ்ட்ரீம் செய்யவுள்ளதாக ஜி-5 அறிவித்துள்ளது.
இப்படத்தை புதுமுக இயக்குநர் விகர்னன் அசோக் எழுதி இயக்கியுள்ளார். தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை டைரக்டர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி வழங்கியுள்ளது.
இதைப் பற்றி ஹீரோ கவின்,
“ ஏற்கனவே திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போது ZEE5 மூலம் இன்னும் பெரிய ரசிகர்கள் வட்டத்தை அடையப் போவதில் மகிழ்ச்சி. வேலு பல அடுக்குகளைக் கொண்ட வித்தியாசமான கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்தின் ஆழத்தை அதிகமானோர் ரசிப்பார்கள் என நம்புகிறேன்” என்கிறார்.
வெற்றிமாறன் என்ன சொல்றாருன்னா,
“இந்தப் படம் பேசும் கருத்து காலத்தை கடந்தவை. இப்போது ZEE5-ல் வெளியாகும் நிலையில், முதன் முறையாக இதை அனுபவிக்கப் போகும் புதிய பார்வையாளர்களிடம் சென்று சேரும் வாய்ப்பு கிடைப்பது மகிழ்ச்சி” என்கிறார்.
— ஜெடிஆர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.