அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

25 ஆயிரம் பேர் பங்கேற்ற மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறையில் நியமனம் பெற்று, பணி ஆணைகள் வழங்கும் வகையிலான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் இன்று (பிப்.7) நடைபெற்றது.

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், திருச்சி மேற்கு சட்டப் பேரவை தொகுதி உறுப்பினருமான கே.என். நேரு ஏற்பாட்டில், கேர் பொறியியல் கல்லூரியில் இன்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

இதில், உற்பத்தி துறை சார்ந்து முன்னணி நிறுவனங்கள் எம்ஆர்எப், ரானா, செயின்ட் கோபெய்ன், டிவிஎஸ் மோட்டார்ஸ், லூகாஸ், டாடா மோட்டார்ஸ், அசோக் லேலண்ட், யமஹா மோட்டார்ஸ், போஸ்க், மதர்ஸன் உள்ளிட்ட 50-க்கும் மேலான நிறுவனங்கள் பங்கேற்றன. தகவல் தொழில்நுட்பத் துறையிலிருந்து விடார்ட், சுதர்லேண்ட், லாரல்ஸபி, இன்விடஸ் உள்ளிட்ட 30-க்கும் மேலான நிறுவனங்களும்; வங்கி – நிதித்துறையிலிருந்து பாரத ஸ்டேட் வங்கி, ஹெச்டிஎப்சி, ஆக்ஸிஸ் வங்கி, ஸிரிராம் பைனான்ஸ் உள்ளிட்ட 20-க்கும் மேலான நிறுவனங்கள் பங்கேற்றன.இந்த வேலை வாய்ப்பு முகாமில் படித்த பட்டதாரி இளைஞர்கள், பெண்கள் என 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலந்து கொண்டு பயனடைந்தனர்.முகாமில் மொத்தம் 327 நிறுவனங்களிடம் வேலை வாய்ப்பு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் கே என் நேரு வழங்கி, பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். கேர் பொறியியல் கல்லூரி சி.இ. ஓ செந்தில் வரவேற்று பேசினார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

மாவட்டகலெக்டர் சரவணன், பெரம்பலூர் எம்.பி அருண் நேரு, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி,மாநகரச் செயலாளர் மாநகராட்சி மேயர் அன்பழகன்,மாநகராட்சி ஆணையர் மதுபாலன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முதல்வர் பிறந்தநாள்

இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட துணை செயலாளர் முத்து செல்வம், மத்திய மாவட்டம் முன்னாள் துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர், பொருளாளர் துரைராஜ்,ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, அந்தநல்லூர் கதிர்வேல்,பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ், காஜாமலை விஜய், நாகராஜன், கமால் முஸ்தபா,ராம்குமார்,வக்கீல் இளங்கோ, மாநகர அயலக அணி அமைப்பாளர் துபேல் அகமது, வர்த்தகர் அணி அமைப்பாளர் பி.ஆர்.சிங்காரம், மத்திய மாவட்ட வர்த்தகர் அணி முன்னாள் துணை அமைப்பாளர் தொழிலதிபர் ஜான்சன் குமார்,முன்னாள் பகுதி செயலாளர் தில்லை நகர் கண்ணன், டோல்கேட் சுப்பிரமணி, பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம், புத்தூர் தர்மராஜ், திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி,மாநகரத் துணைச் செயலாளர் கவுன்சிலர் கலைச்செல்வி, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் கலந்தர் பஷீர்,

மாவட்ட பிரதிநிதிகள் வக்கீல் மணிவண்ண  பாரதி, சோழன் சம்பத், தொ.மு.ச.மாவட்ட கவுன்சில் செயலாளர் குணசேகரன், சோமரசம்பேட்டை துரைப்பாண்டியன், கவுன்சிலர்கள் மண்டி சேகர், கலைச்செல்வி, விஜயா ஜெயராஜ், புஷ்பராஜ்,ராமதாஸ், மஞ்சுளா பாலசுப்பிரமணியன், வட்டச் செயலாளர்கள் புத்தூர் பவுல்ராஜ், வாமடம் சுரேஷ், பி.ஆர்.பி. பாலசுப்பிரமணியன், மார்சிங் பேட்டை செல்வராஜ், தனசேகர், நிர்வாகிகள் என்ஜினியர் நித்தியானந்தம், பந்தல் ராமு, பிராட்டியூர் மணிவேல், சர்ச்சில், ரஜினி கிங், அபூர்வா மணி, எம்.ஆர் எஸ்.குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.