அங்குசம் பார்வையில் ‘மேக்ஸ்’ திரைப்படம்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

யாரிப்பு : ‘வி கிரியேஷன்ஸ், கலைப்புலி எஸ்.தாணு, கிச்சா கிரியேஷன்ஸ்  கிச்சா சுதீப். டைரக்‌ஷன் : விஜய் கார்த்திகேயா. நடிகர்-நடிகைகள் : கிச்சா சுதீப், வரலட்சுமி சரத்குமார், சுனில், ஆடுகளம் நரேன், இளவரசு, சம்யுக்தா ஹொர்னாட், சுக்ருதா வாக்லே, சரத் லோகித்ஸ்வா, பிரமோத் ஷெட்டி, ரெடின் கிங்ஸ்லி, அனிருத் பட், உக்ரம் மஞ்சு, கரண் ஆர்யா. ஒளிப்பதிவு : சேகர் சந்திரா, இசை : அஜ்னீஷ் பி.லோக்நாத், எடிட்டிங் : எஸ்.ஆர்.கணேஷ் பாபு, தயாரிப்பு வடிவமைப்பு;  சிவகுமார் ஜே. காஸ்ட்யூம் ; பெருமாள் செல்வம், சவுண்ட் டிசைன் : டி.உதயகுமார். பி.ஆர்.ஓ.  ரியாஸ் கே.அகமத்.

மொதல்ல ஒரு சந்தேகத்தை எழுதிட்டு, அப்புறமா படத்தின் விமர்சனத்தை எழுதுனா  நல்லாயிருக்கும். கன்னட சினிமாவில் பெரிய ஹீரோவாக இருப்பவர் கிச்சாசுதீப். இப்படித்தான் நாம பார்த்திருக்கோம். ஆனா இந்தப் படத்தின் டைட்டில் கார்டில் ’கிச்சா சுதீபா’ அப்படின்னு போட்டார்கள். சம்பந்தப்பட்ட ஹீரோவே நியூமராலஜிப்படி இப்படி மாத்திட்ட தகவலை,  கன்னட டைட்டிலை தமிழில் மொழி பெயர்த்தவருக்கு சொல்லலியோ என்னவோ? அதே போல் ஃபைனான்சியர் சந்திரபிரகாஷ் ஜெயின் என்பதற்குப் பதிலாக சத்திரபிரகாஷ் ஜெயின் என நன்றி கார்டில் போட்டார்கள். இதுவும் டிரான்ஸ்லேட்டருக்குத் தெரியலையோ என்னவோ ?

Frontline hospital Trichy

சரி, இப்ப படத்தைப் பத்தி பார்ப்போம்.

அந்த ஊருக்கு  டிரான்ஸ்பராகி வரும் இன்ஸ்பெக்டர் அர்ஜுன் [ கிச்சா சுதீப்புன்னு நாம எழுதுவோம் ] டூட்டியில் சேருவதற்கு முதல் நாள் இரவு தனது அம்மாவுடன் வரும் போது, போலீஸ் செக்போஸ்டில் பெண் காவலர் ஒருவரை மானபங்கம் செய்த இரண்டு ரவுடிகளை அடி பின்னியெடுத்து அள்ளிக் கொண்டு ஸ்டேஷன் வருகிறார்.  வந்த பின் ஸ்டேஷனில் உள்ள மற்ற காவலர்கள் சொன்ன பிறகு தான் அந்த ரவுடிகள் அமைச்சர்களின் [ ஆடுகளம் நரேன், சரத் லோகித்ஸ்வா ] மகன்கள் என்று.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

ஆனாலும் தில்லுடன் [ பின்ன ஹீரோன்னா சும்மாவா..] லாக்கப்பில் பூட்டிவிட்டு வீட்டுக்கு கிளம்பிவிடுகிறார். மறுநாள் ரிட்டையர்டாகும் ஹெட் கான்ஸ்டபிள் இளவரசும் மற்ற காவலர்களும் சொந்த வேலையாக வெளியில் சென்றுவிடுகின்றனர். சிறிதி நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தால் லாக்கப்பில் அமைச்சர்களின் மகன்கள் ரத்த வெள்ளத்தில் செத்துக் கிடக்கின்றனர்.

இதை இன்ஸ்பெக்டர் அர்ஜுன் எப்படி சமாளித்து, அமைச்சர்களுக்கும் லோக்கல் தாதா சுனில், க்ரைம் இன்ஸ்பெக்டர் வரலட்சுமிக்கும் தண்ணி காட்டி  தானும் தப்பித்து, தன்னுடன் பணிபுரியும் போலீஸ்காரர்களையும் காப்பாற்றுகிறார்? என்பதன் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘மேக்ஸ்’. இரவு 8 மணிக்கு கிச்சா சுதீப் ஆரம்பிக்கும் அநீதிக்கு எதிரான யுத்தம் காலை 6 மணிக்கு பொழுது விடியும் போது முடிகிறது.

படத்தின் முதல் சீனே கிச்சா சுதீப், பவர்ஃபுல் பாம்களைப் போட்டு எதிரிகளை சோலி முடிக்கிறார். அமைச்சர்கள் இருவரும் மீடியாக்காரர் ஒருவரைப் போட்டுத் தள்ளுகிறார்கள். தாதா சுனில் தன்னோட பங்குக்கு ஒருவனின் தலையை வெட்டி வீசுகிறார். ”ஆத்தாடியாத்தோவ்… ஆரம்பிச்சுட்டாய்ங்களா”ன்னு நாம் டென்ஷனாகுறதுக்குள்ள அடுத்தடுத்து பிரிலியண்டான அதிரடி ஆக்‌ஷன் ஸ்கிரிப்ட் செம ஸ்பீடாகி, நம்மை நிமிர்ந்து உட்கார வைக்குது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

மேக்ஸ் திரைப்படம்
மேக்ஸ் திரைப்படம்

நல்ல வாட்டசாட்டமா கிச்சா சுதீப் பண்ணும் ஆக்‌ஷனெல்லாம் நம்பும்படியாகத் தான் இருக்கு. அதே போல் தன்னுடைய சகாக்களைக் காப்பாற்ற, பதட்டமே இல்லாமல் அவர் போடும் பிளான், கமிஷனரிடம் வீடியோ காலில் காட்டும் தெனாவெட்டு, டயலாக் டெலிவரி என பின்னிட்டான் மனுஷன். அநியாயத்தை அழிக்க, மேக்ஸிமம் எந்த எல்லைக்கும் போவார் கிச்சா என்பதால் இந்த ‘மேக்ஸ்’டைட்டிலே.

நம்ம இளவரசுக்கு அப்படி ஒரு அருமையான கேரக்டர். அமைச்சர்களின் மகன்கள் சீரழித்த 13 வயது சிறுமியின் கதையை இவர் சொன்ன பிறகு தான் கிச்சாவுக்கே தெரிகிறது. இளவரசின் கேர்க்டர் பெயர் ராவணன். க்ளைமாக்ஸுக்கு முன்பாக இளவரசுவின் உருக்கமான நடிப்பு அனைவரையும் கலங்க வைத்துவிடும்.

ராவுடி & ரவுடிகளின் இன்ஸ்பெக்டராக வரலட்சுமி, கிச்சா சுதீப்புடன் பணியாற்றும் பெண் போலீஸ்காரார்களாக சம்யுக்தா, சுக்ருதா ஆகியோரும் பாஸ்மார்க் வாங்கிவிட்டார்கள்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இரண்டேகால் மணி நேரப்படத்தில் இரண்டு மணி நேரம் இரவில் நடப்பதால், கேமராமேன் சேகர் சந்திராவின் கடுமையான உழைப்பும், மியூசிக் டைரக்டர் அஜ்னீஷ் லோக்நாத்தின் பின்னணி இசையும் படத்திற்கு பெரிய சப்போர்ட்டாக இருக்கிறது.

மேக்ஸிமம் எண்டெர்டெய்ன்மெண்டுக்கு கியாரண்டி கொடுத்திருக்கார் டைரக்டர் விஜய் கார்த்திகேயா. அதை கிச்சா சுதீப்பை வைத்து கச்சிதமாக ‘கேட்ச்’ பண்ணிவிட்டார் கலைப்புலி தாணு.

 

—   மதுரைமாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.