மதிமுக மாநாடு தமிழக அரசியலில் திருப்புமுனையாகுமா !

0

மதிமுக மாநாடு தமிழக அரசியலில் திருப்புமுனையாகுமா !

மதுரையில் வருகிற செப்-15 அன்று அண்ணா பிறந்தநாள் விழாவை கொண்டாடும் விதமாக மதுரையில் நடைபெறவிருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் எழுச்சி மாநாடு ”தமிழக அரசியலில் திருப்புமுனையாக அமையும்” என தெரிவித்துள்ளார் மதிமுகவின் பொதுச்செயலர் வைகோ.

MDMK_மாநாடு மேடையில்..
MDMK_மாநாடு மேடையில்..

“அமைப்பு தேர்தல் நடைபெற்று முடிந்து கழகம் பொலிவோடும் புத்தெழுச்சி யோடும் உள்ள நிலையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 ஆவது பிறந்தநாள் விழாவை கொண்டாடப் போகிறோம். ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவா கூட்டம் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு என்று அனைத்தையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து இந்து ராஷ்டிரத்தை அமைப்பதற்கு துடித்துக் கொண்டிருக்கின்றன. மாநிலங்களே இருக்கக் கூடாது; அவை தனித்தனி அடையாளங்களோடு திகழக் கூடாது; அவற்றையெல்லாம் நகர சபைகளைப் போல ஆக்கிவிட வேண்டும் என்று ஒன்றிய பாஜக அரசு ஆர்.எஸ்.எஸ் பின்ன ணியில் வெறித்தனமாக செயல்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில்தான் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 115 ஆவது பிறந்தநாள் விழாவை திறந்த வெளி மாநாடாக சிறப்பாக கொண்டாட இருக்கிறோம்.” என மாநாட்டின் நோக்கம் குறித்து விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் மதிமுகவின் பொதுச்செயலர் வைகோ.

டாக்டர்.S.ரொஹையா
டாக்டர்.S.ரொஹையா

மேலும் ” இந்த மாநாட்டிற்கு கழக அவைத்தலைவர் கொங்கு நாடு கழகத்திற்கு அளித்துள்ள கொடை ஆடிட்டர் அர்ஜூனராஜ் அவர்கள் தலைமை வகிக்க இருக்கிறார். மதுரை மண்டலத்தின் செயல்வீரராக திகழும் அடல் ஏறு நமது சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன் அவர்கள் வரவேற்புக் குழு தலைவராக இருந்து மாநாட்டை பொறுப்பேற்று நடத்துகிறார். கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் தி.மு.இராசேந்திரன் அவர்கள் மாநாட்டை திறந்து வைக்கிறார். குமரி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் எஸ்.வெற்றிவேல் அவர்கள் கழகக் கொடியை ஏற்றி வைக்கிறார். திராவிட இயக்கச் சுடரை திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் என்.செல்வராகவன் ஏற்றுகிறார்.

https://beatsjobs.com/
https://beatsjobs.com/

திராவிட இயக்க முதல் மூன்று தலைவர்கள் திருவுருவப்படத்தை கழகத் துணைப் பொதுச்செயலாளர் செஞ்சி ஏ.கே.மணி அவர்கள் திறந்து வைக்கிறார். தந்தை பெரியார் திருவுருவ படத்தை கழகத் துணைப் பொதுச்செயலாளர் ஆடுதுறை இரா.முருகன் அவர்களும், மொழிப்போர் தியாகிகள் படங்களை கழகத் துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொகையா ஷேக் முகமது அவர் களும், பேரறிஞர் அண்ணா படத்தை ஆட்சிமன்றக் குழு செயலாளர் டாக்டர் சி.கிருஷ்ணன் அவர்களும் திறந்து வைக்கின்றனர். கழகத்தின் வீறுகொண்ட சொற்பொழி வாளர்கள் கருத்து மழை பொழிகின்றனர். கழகப் பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ, துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா ஆகியோர் சிறப்புரை ஆற்று கின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேச மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் சதன் திருமலைக்குமார், வழக் கறிஞர் கு.சின்னப்பா, டாக்டர் ஏ.ஆர்.ஆர். ரகுராமன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.” என்றும் வைகோ அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மதிமுக மாநாடு முகப்பு
மதிமுக மாநாடு முகப்பு

வழக்கம்போல, மதுரை விமான நிலையம் அருகே வலையங்குளம் ரிங்ரோடு அருகே இம்மாநாடு நடைபெறவிருக்கிறது. மதுரை மாவட்ட தெற்கு தொகுதி மதிமுக எம்.எல்.ஏ. பூமிநாதன் தலைமையில் அக்கட்சியினர் மாநாட்டு தொடர்பான பணிகளை விரைவுபடுத்தி வருகின்றனர். மாநாட்டு பந்தல் அமைக்கும் பணியை பந்தல் சிவா மேற்கொண்டு வருகிறார். கடந்த முறை இதே மைதானத்தில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் உணவு வீணடிக்கப்பட்டதாக எழுந்த புகாரையடுத்த, இம்முறை கண்டெய்னரில் வைத்து தொண்டர்களுக்கு கொடுக்க இருப்பதாக மதிமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை மாநாடு மதிமுக
மதுரை மாநாடு மதிமுக

இம்மாநாட்டை வெற்றியடையச் செய்யும்பொருட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் முன்னணியாளர்களை ஒருங்கிணைத்து ஆலோசனைக்கூட்டங்களையும் மதிமுக சார்பில் நடத்திவருகின்றனர். இலட்சக்கணக்கான தொண்டர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படும் இம்மாநாட்டு திடலின் பின்புறம் ரிங் ரோட்டில் வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகளையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

”மாநாடு என்றாலே, கம்பீரமான பேரணி மிக முக்கியமான ஒன்று. ஆனால், பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் மாநாட்டு திடலில் ஒன்றுகூடி பின்னர் கலைந்து செல்வது என்பது ஒரு கட்சி சார்ந்த கூட்டமாகவே மக்கள் மனதில் கடந்து சென்றுவிடும். அதேநேரம், முக்கியமான வீதிகளின் வழியே இராணுவ மிடுக்கோடு, கம்பீர முழக்கங்களோடு பேரணியாக சென்றால் இம்மாநாட்டின் தாக்கமே வேறு மாதிரி இருக்கும்” என தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர் சில மதிமுக தொண்டர்கள்.

மதிமுக மாநாடு
மதிமுக மாநாடு

ஆனாலும், ஆளுநர் ரவிக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை தமிழகமே திரும்பிப் பார்க்கும் வகையில் நடத்தி முடித்திருக்கும் மதிமுக தொண்டர்கள் அதே உற்சாகத்துடன் மதுரை குலுங்க மதிமுக மாநாட்டிலும் பங்கேற்பார்கள் தமிழகத்தில் திருப்புமுனையாக இந்த மாநாடு அமையும் என்கிறார்கள் மதிமுக தொண்டர்கள்.

மக்களவை தேர்தலில் வைகோவின் மகன் துரை.வைகோ விருதுநகர் தொகுதியில் போட்டியிடலாம் என்ற அடிப்படையில் தென்பகுதியில் நடக்கும் இந்த மாநாடு முக்கியத்துவம் பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தென் மண்டல ஐஜி நரேந்திரன் நாயர் ஆலோசனையின் பேரில், டிஐஜி ரம்யா பாரதி மேற்பார்வையில் எஸ்பி சிவபிரசாத் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.