அர்த்தமுள்ள ஆன்மீகம் – முனைவர் கரு.ஆறுமுகத்தமிழன் – இருளைவிடவும் அறியாமை மிகவும் மோசமானது ! பாகம் 1
இருள் குறித்து நமக்கு எப்போதும் ஓர் அச்சம் இருக்கும். இஇருளின் குணம் என்னவெனில் இருள் நமக்கு எதையும் காட்டாது. இருள் எல்லாவற்றையும் மறைத்து வைத்துக்கொள்ளும் என்பதால் இருள் என்பது கொடுமையானது என்று சைவசித்தாந்தத்தில் குறிப்பிடப் படுகின்றது. இருள் எதையும் காட்டாது, அறிவை விளங்கவிடாது. நாம் அறிவு பெறவேண்டும் என்றால் நாம் எல்லா வற்றையும் பார்க்கவேண்டும். இருள் எல்லாவற்றையும் மறைத்துவிடுகின்றது. எனவே இருள் கொடியது.
இருளைவிட கொடியது ஒன்று உள்ளது. அது என்னவென்றால், இருளால் விளைவிக்கப்படுகின்ற அறியாமை. இருளுக்கும் அறியாமைக்கும் ஓர் அரிய விளக்கத்தைச் சைவசிந்தாந்தம் குறிப்பிடும் ஒரு பொருளும் காட்டாது, இருள் தனதுருவம் காட்டும் இருபொருளும் காட்டாது இது’ என்று இருள் பற்றி சொல்வார்கள். இருளுக்குள் யார் இருப்பதும் தெரியாது. நான் மேடையில் நிற்கிறேன். மின் விளக்கு கள் அணைந்து விட்டால் நான் மேடையில் இருப்பது யாருக்கும் தெரியாது. இருட்டு தெரியும் உங்களுக்கு, இருட்டுக் குள் என்ன இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது.
அறியாமையில் இருக்கிற சிக்கல் என்னவென்றால், அறியாமை நம்மிடம் இருக்கிறது என்பதே நமக்குத் தெரியாது. நமக்கு அறிவில்லை என்பதே தெரியாது.
நாம் யாராவது ஒருவரைப் பார்த்து. உனக்கு அறிவு இருக்கிறதா?’ என்றால் அவர் கோபப்படுவார். அவர்பதிலுக்கு ‘உனக்கு அறிவுஇருக்கிறதா?’ என்று கேட்பார். நமக்குக் கோபம் வரும் காரணம் நமக்கு அறிவு இருக்கிறது என்று நம்புகிறோம். அறியாமையில் உள்ள சிக்கல் என்னவெனில், இருள் சார்ந்த பொருளைக் காட்டாது. அறியாமையில் உள்ள சிக்கல் என்பது, அறியாமை தன்னையும் காட்டாது, தனக்குள் உள்ள பொருளையும் காட்டாது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அறியாமையில் உள்ளவர்கள் எப்படி தங்கள் முட்டாள் என்பது தெரியாதே அப்படியே ஓர் அடிமைக்குத் தன்னை அடிமை என்று தெரியாது. அடிமையில் நிலையில் சுகமாக இருப்பான். வெந்நீரில்போட்ட ஆமைக்கு அந்த நீர் எப்படி கதகதப்பாக இருக்கிறதை உணராமல் மகிழ்ந்திருக்கும். நாம் வெந்து போகப்போகிறோம் என்பதை உணராமல் அந்த ஆமை இருக்கும். அறியாமையிலும் அடிமைத்தனத்திலும் இருப்பவர்கள், நமக்கு இவை அழிவைத் தேடித் தரும் என்பதை உணராமல் மகிழ்ந்திருப்பார்கள். அதனால்தான் அறியாமை இருளைவிட மோசமானது என்று குறிப்பிடுகின்றனர்
— முனைவர் தி.நெடுஞ்செழியன்.