இருளைவிடவும் அறியாமை மிகவும் மோசமானது ! அர்த்தமுள்ள ஆன்மீகம் – கரு. ஆறுமுகத்தமிழன் ! (பாகம் -2)

1

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கிரேக்க மெய்யியலில், அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் மாணவன் பிளேட்டோ என்பவன் இருக்கிறான். பிளோட்டோ அறியாமை எவ்வளவு கொடுமையானது என்பதை விளக்க ஒரு கதை சொல்கிறான். ‘ஒரு குகை. அந்தக் குகைக்குள் சில மனிதர்களைப் பிறந்ததிலிருந்தே கட்டிவைத்துள்ளனர். அவர்களுக்கு வெளியுலகம் எப்படி இருக்கும் என்பதே தெரியாது. குகை முழுக்க இருட்டு. மனிதர்கள் கட்டி வைக்கப்பட்டுள்ள பகுதிக்குப் பின் ஒரு தீக்குண்டம் எரிந்துகொண்டிருக்கிறது. கட்டி வைக்கப்பட்டுள்ள மனிதர்களுக்கும் தீக்குண்டத்திற்கும் இடையில் யாரவது நடந்து சென்றால் அவர்கள் உருவம் சுவரில் தெரியும். அந்த அடிமைகளுக்கு அந்த சுவரில் தெரியும் உருவம்தான் தெரியும். உண்மை உருவம் தெரியாது. இதைப் பார்த்து அந்த மனிதர்கள் இதையே உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அர்த்தமுள்ள ஆன்மீகம்
அர்த்தமுள்ள ஆன்மீகம்

Sri Kumaran Mini HAll Trichy

கழுதை பொம்மை உருவத்தின் நிழலைச் சுவரில் பார்த்து, இது ஏதோ ஓர் உருவம் என்று நினைத்துக்கொள்வார்கள். இந்தக் கட்டி வைக்கப்பட்ட மனிதர்களில் ஒருவன் சங்கிலியை உடைத்துக்கொண்டு வெளியே போய்விட்டான். அவனால் வெளியில் எதையும் பார்க்கமுடியவில்லை. காரணம், வெயில் கண்ணைச் கூசுகின்றது. தலையைக் கவிழ்த்துகொள்கிறான். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் கண்ணுக்குப் பழக்கமாகிறது. பின்னர் வெளிச்சத்தில் எதிரில் உள்ள பொருளைப் பார்க்கிறான். மரங்களைப் பார்க்கிறான். கொஞ்சம் மேல தலையை உயர்த்தி சூரியனையே பார்க்கிறான். உலகம் எவ்வளவு அழகாக இருக்கிறது. குகையின் உள்ளே நாம் பார்த்தது எல்லாம் நிழலாட்டம்தான் என்பதை அவன் அறிந்துகொள்கிறான்.

முனைவா் கரு.ஆறுமுகத்தமிழன்
முனைவா் கரு.ஆறுமுகத்தமிழன்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

நாம் இதுவரை அறிந்திருந்தது என்பது அறிவு அல்ல, அறியாமை. இப்போது அறிந்துகொள்வதுதான் உண்மை அறிவு என்பதை அறிந்துகொள்கிறான். அறிந்த இந்த உண்மையை உள்ளே கட்டுண்டு கிடக்கும் நம் தோழர்களுக்குச் சொல்லவேண்டும் என்று விரும்புகிறான். இஃது உண்மை உலகம் அல்ல. உண்மை உலகம் என்பது வெளியே உள்ளது. நீங்கள் அறியாமையிலிருந்து விடுபட்டு, உண்மையைத் தரிசிக்க வாருங்கள் என்று அழைக்க அவன் உள்ளே வருகிறான். உள்ளே வந்து அவர்களைப் பிணைத்திருக்கும் சங்கிலியைத் அவிழ்த்து விட்டு, உண்மை வெளியே உள்ளது வாருங்கள் என்றபோது, அவர்கள் இவனைத் திட்டுகிறார்கள்.

Flats in Trichy for Sale

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

‘உனக்குக் கிறுக்குப் பிடித்துவிட்டது. உனக்குப் புத்தி கலங்கிவிட்டது. இங்கே எவ்வளவு சௌகரிமாய் இருக்கிறோம். வெளியே இருப்பதைப் பார்த்து சித்தம் கலங்கி பித்துபிடித்துப் பேசுகிறாய். எங்களின் நிம்மதியைக் குலைப்பதற்காக வந்திருக்காய் என்று அறிவு சொன்னவனை அடிப்பதற்கப் போகிறார்கள். அறியாமை அவ்வளவு மோசமானது. இருளைவிடவும் மோசமானது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

 

—    முனைவர் தி.நெடுஞ்செழியன்.

 

இருளைவிடவும் அறியாமை மிகவும் மோசமானது- பாகம் 1 ஐ காண லிங்கை கிளிக் செய்யவும்

அர்த்தமுள்ள ஆன்மீகம் – முனைவர் கரு.ஆறுமுகத்தமிழன் – இருளைவிடவும் அறியாமை மிகவும் மோசமானது ! பாகம் 1

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.