தமிழ் என்பது அறம், தமிழ் என்பது சமத்துவம் – அர்த்தமுள்ள ஆன்மீகம் – பேராசிரியர் கரு.ஆறுமுகத்தமிழன்
தமிழ் என்பது சமத்துவம். இங்கே ஏற்றத்தாழ்வுகள் எல்லாம் கற்பிக்கப்படவில்லை. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ அப்படி என்று சொல்கிற மரபுதான் இங்கு இருந்தது. ஒரு மரபு முன்வைக்கப்பட்டபோது இங்கே சித்தர் கடுமையாக கேள்வி கேட்கிறார். “பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா? இறைச்சி தோல் எலும்பினும் இரக்கமிட்டு இருக்குதோ பறைச்சி போகம் வேறேதோ பனத்தி போகம் வேறேதோ பறைச்சியும் பணத்தியும் பகுந்து பாடும் உம்முளே”
ஒரு சாதியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் துறவு உரிமை இருக்கின்றது. கீழ்சாதியைச் சேர்ந்தவர்களுக்கு துறவு உரிமை கிடையாது என்று உள்ளது. துறவியாக உரிமை கிடையாது.
ஒரு தெலுங்கு அரசன் ஒருத்தர் ஒரு வழியில் போய்கிட்டு இருந்தார். ஒரு சமாதி கோயில் ஒன்று இருந்தது. அது குகை இனம் நமசிவாயர் என்கின்ற சூத்திர ஞானியின் உடைய சமாதி கோயில். கோயிலை பார்த்த உடனே அந்த அரசன் கும்பிட்டான். சூத்திரன் கோவிலை கும்பிட முடியாது. சூத்திரனுக்கு சன்னியாசியாகிற உரிமையே கிடையாது என்ற அந்த ஆதீனம், சூத்திரனுக்கும் சன்னியாசி ஆகுறதுக்கு உரிமை இல்லை.

விவேகானந்தருக்கு அதுபோல ஒரு சிக்கல் வங்கத்தில் வந்தது. விவேகானந்தர் மேல் வருணத்தார் கிடையாது. இவர் எப்படி துறவி ஆகலாம்? அது பிரச்சனையாக எழுப்பப்பட்டது. பேனர்ஜி என்னும் ஒருவர் சொல்கிறார் “வங்காளத்தை ஆளுகிறவர் ஒரு நல்ல இந்து ராஜாவாக இருந்திருந்தால் விவேகானந்தர் செய்கிற வேலைகளுக்கு அவரை இந்நேரம் தூக்கில் போட்டு இருப்பார்”.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இங்கே தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை அஃதிலார் … உறுதிப்பாடும், மன அடக்கமும் உடையவருக்கே தவத்தின் பெருமை வாய்க்கும். எனவே கட்டுப்பாடான ஒழுக்கம் இல்லாதவர்கள், தவத்தை மேற்கொள்வது வீண் செயலேயாகும் என்கிறார் திருவள்ளுவர்.
தமிழ் என்பது அறம், நீதி. இங்கே, நீதி மரபு எப்படி இருந்தது என்றால் மேல இருக்குறவன் சொல்லுவான், நீ இந்த வகையறா நீ கடைப்பிடிக்க வேண்டிய நியதி இது. அப்படி என்று சாதிக்கு ஒரு நீதி என்று பிரித்து வைத்து நீதி சொல்லுகிற முறைமையை அறம் சொல்லுகிற முறைமையை உடைக்கிறேன் என்பது தமிழ் மரபு. அது மனுதர்மத்தின் உடைய வடபுலத்து மரபின் உடைய அறம். நீதி வழங்குகிற முறைமை எல்லாம் உடைக்கப்படும் இங்கே.
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான் என்று சொல்லுகிற மரபுதான் தமிழ் மரபாக இருந்து வந்தள்ளது. பிச்சை எடுத்தாவது ஒருத்தன் வாழ்ந்தாக வேண்டிய சூழ்நிலை வருமானால், சூழ்நிலை உருவாக்கிய இறைவன் நாசமாக போகட்டும் என்று கடவுள் நம்பிக்கை உள்ள வள்ளுவர் சொல்லுகிறார், பிச்சை எடுத்து வாழுற சூழ்நிலையை கடவுள் ஒருத்தனுக்கு உருவாக்குவான் என்று சொன்னால் இவன் நாசமா போக வேண்டியது இல்ல. கடவுள் நாசமாக போகட்டும் என்று சொல்லுகிறது தமிழ். தமிழ் என்பது அறம். சமத்துவம் என்பதே அதன் பொருள்.
ஆக்கம் – பேராசிரியர் தி.நெடுஞ்செழியன்