மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்குவதற்கானஅளவீட்டு முகாம்
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முன்னேற விரும்பும் வட்டாரமான (Aspirational Block) துறையூரில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு Artificial Limbs Manufacturing Corporation of India (ALIMCO) மூலம்
1.மூன்று சக்கர வண்டிகள்
2. மடக்கு சக்கர நாற்காலி, மூளை முடக்குவாத சிறப்பு சக்கர நாற்காலி
3. ஊன்றுகோல்கள் மற்றும் நடைபழகுஉபகரணம்
4. காதுக்கு பின் அணியும் காதொலிகருவி
5. பிரெய்லி கை கடிகாரம்
6. புறஉலக சிந்தனையற்ற மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உபகரணங்கள்
7. தொழுநோயினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான ADL Kit மற்றும் கைபேசி
8. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான Tablet மற்றும் அதிநவீன கைபேசி
9. நவீன மடக்கு ஊன்றுகோல்
10. மின்கலனால் இயங்கும் மூன்று சக்கர மிதிவண்டி மற்றும் மோட்டார் பொருத்திய சக்கர நாற்காலி (Joystick Operated)
11. காலிப்பர் (உதவிஉபகரணம்)
12. செயற்கைஅவயங்கள் (செயற்கை கை,கால்) போன்ற உதவி உபகரணங்கள் அளவீடு செய்து வழங்கவுள்ளனர்.
மேற்காணும் உதவி உபகரணங்களை பெறுவதற்கு கீழ்காணும் விவரப்படி அளவீடுமுகாம் நடைபெறவுள்ளது.
அளவீடுமுகாம் நடைபெறும் நாள் மற்றும் இடங்கள் விவரம்:
வ.
எண் |
நாள் | முன்னேறவிரும்பும் வட்டாரம்
(Aspiration |
முகாம் நடைபெறும் கிராமம்/இடம் | முகாம் நடைபெறும் நேரம்
|
1 | 19.10.2024
(சனிக்கிழமை) |
துறையூர் | வட்டார வள மையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம்,
துறையூர். |
10.00 மு.ப.முதல் 02.00 பி.ப. வரை
|
2 | 21.10.2024
(திங்கள்) |
நாகலாபுரம் | அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி,
நாகலாபுரம். |
10.00 மு.ப.முதல் 02.00 பி.ப. வரை
|
3 | 2.10.2024
(செவ்வாய்) |
சிக்கத்தம்பூர் | அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி,
சிக்கத்தம்பூர். |
10.00 மு.ப.முதல் 02.00 பி.ப. வரை
|
40 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது வசிப்பிடத்திற்குட்பட்ட மேற்காணும் விபரப்படி கிராமப்பகுதிகளில் நடைபெறும் முகாம் நாளன்று
- மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை,
- குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை
- ஆதார் அட்டை ஆகியவைகளின் உண்மைஆவணம் மற்றும் அதனதன் நகல்
- புகைப்படம்-2 (Passport size) ஆகியவைகளுடன் மேற்படி முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு தெரிவிக்கப்படுகிறது.
மேலும், விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகம், திருச்சிராப்பள்ளி அலுவலகத்தை தொடர்பு கொண்டு விபரம் பெற்றுக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்.