தேனி மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற பிரம்மாண்ட மருத்துவ துறை சார் புத்தக கண்காட்சி !
அறுவை சிகிச்சை மருத்துவர்கள் தங்களது திறனை வளர்த்துக் கொள்ளவும் பயிற்சி மருத்துவர்கள் மருத்துவ மாணவர்கள் செவிலியர்கள், செவிலிய பயிற்சியாளர் உள்பட அனைவரும் அறிந்து கொள்ள பிரமாண்ட மருத்துவ புத்தக கண்காட்சி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அரசு தேனி மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கில் பிரமாண்ட மருத்துவ புத்தக கண்காட்சி நடைபெற்றது. தேனி மருத்துவக் கல்லூரி இளநிலை மற்றும் முதுநிலை பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் வருடம் தோறும் புத்தக கண்காட்சி நடந்து வருகிறது .
தற்போது 3 நாட்கள் நடைபெறும் இந்த அரிதான புத்தகக் கண்காட்சியில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு புத்தக நிறுவனங்கள் கலந்து கொண்டு 8,500 புத்தகங்கள், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக அறுவை சிகிச்சை துறை குறித்தான அண்மை பதிப்பு மருத்துவ புத்தகங்களை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சியில் மருத்துவ பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மருத்துவ இளநிலை மற்றும் முதல் நிலை மாணவர்கள், செவிலியர் பள்ளி மாணவ மாணவிகள் பார்வையிட்டு அவரவர் துறைகளுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி வருகின்றனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மேலும், தனியார் மற்றும் அரசு பயிற்சி மைய மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயார் செய்யும் வகைகள் கண்காட்சியை பார்வையிட்டனர். மருத்துவ மாணவர்கள் பயன்பெறும் வகையில் 20 சதவீத தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
— ஜெய்ஸ்ரீராம்.