கும்பகோணத்தில் கலைஞர் நூற்றாண்டையொட்டி மருத்துவ முகாம் !
கும்பகோணத்தில் கலைஞர் நூற்றாண்டையொட்டி மருத்துவ முகாம் !
கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நடத்தும், கும்பகோணம் தொகுதி, திப்பிராஜபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில், பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் ஆகியவற்றை, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் குத்து விளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்து, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், பள்ளி மாணவ மாணவிகளுக்கு கண்ணொளிக் காப்போம் திட்டத்தின்கீழ் கண் கண்ணாடிகளையும், காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், காப்பீட்டுத் திட்ட பயனாளிகளுக்கு காப்பீட்டுத் திட்ட அட்டைகளையும் வழங்கினார்கள்.
முகாமில், இரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்கோ, இசிஜி, முழு இரத்த பரிசோதனை, மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, தொழுநோய் கண்டறியும் பரிசோதனை, காசநோய் பரிசோதனை, கருப்பைவாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை நடைபெற்றது. மேலும், பொது மருத்துவம், பொது அறுவை சிசிச்சை, மகளிர் மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை, பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம் மற்றும் மனநல மருத்துவத்திற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவரும், மத்திய ஒன்றிய திமுக செயலாளருமான தி.கணேசன் , மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவரும், மேற்கு ஒன்றிய திமுக செயலாளருமான எஸ்.கே.முத்துசெல்வம் , கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெ.சுதாகர் , மருத்துவத்துறை இணை இயக்குநர் மருத்துவர் திலகம் , உதவி இயக்குநர் மருத்துவர் ரவிச்சந்திரன் , வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் கலாராணி அவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாண்டியன் , சசிக்குமார் , திப்பிராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சா.முருகையன் , மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
-ஜார்ஜ் பெர்னாண்டஸ்