தமிழகத்தில் மீண்டும் தலை தூக்கும் ‘குடும்ப விபசாரம்’ !

குடும்ப பெண்களாக இருக்கும் சிலர்  வறுமை மற்றும் ஆடம்பர ஆசையால் இது போன்ற

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தமிழகத்தின் தலைநகரில் ‘குடும்ப விபசாரம்’ மீண்டும் தலை தூக்கி உள்ளது. அது என்ன குடும்ப விபச்சாரம் என்றால்,  குடும்பத்திற்கு தேவையான தட்டு முட்டு சாமான்கள் எல்லாம் சேர்த்து ஒரு குடும்பத்திற்கு தேவையான அனைத்தும் இருக்கும் அத்தோடு ஒரு பெண்ணையும் சேர்த்து கொடுத்து விடுவார்கள்,

ஆசை தீருகிற வரை இருந்து விட்டு 10 நாளோ, 15 நாளோ இருந்து விட்டு மொத்தமாக ஒரு தொகையை கொடுத்து விட்டு செல்வார்கள் இதை குடும்ப விபச்சாரம் என்று அறிமுகப்படுத்தினார்கள், இது தமிழகத்தின் சேலம், கோவை, மதுரை, திருச்சி, பொள்ளாச்சி, ஆகிய  முக்கிய மாநகரங்களில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இருந்து ரகசியமாக நடந்து வருகிறது.

இந்த வார அங்குசம் வார இதழில்…

இந்த நிலையில் சென்னையில் தற்போது ரூ.5 ஆயிரம் கொடுத்தால் ஒரு நாள் முழுக்க வீட்டில் தங்கி காலை டிபன், மதியம் பிரியாணி விருந்துடன் வாடிக்கையாளர்களை உல்லாசப்படுத்தி இன்ப வெள்ளத்தில் மிதக்க வைப்பதுதான் ‘குடும்ப விபசாரம்’ ஆகும்.

குடும்ப பெண்களாக இருக்கும் சிலர்  வறுமை மற்றும் ஆடம்பர ஆசையால் இது போன்ற விபசாரத்தில் ஈடுபடுவது வழக்கம். இவர்கள் குடும்பம் வெளிமாநிலங்களில் இருக்கும். இவர்கள் சென்னைக்கு வேலை தேடி வருவது போன்று வந்து விபசார தொழிலை ஓசையில்லாமல் செய்வார்கள்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

கை நிறைய பணத்தை சம்பாதித்துக் கொண்டு மீண்டும் சொந்த ஊருக்கு செல்வார்கள். போலீசில் பிடிப்பட்டாலும் சம்பாதித்த பணத்தை குடும்பத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு அரசு காப்பகத்தில் தங்கி இருப்பார்கள். பின்னர் கோர்ட்டு மூலம் விடுதலை பெற்று சொந்த ஊர்களுக்கு போவார்கள்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ஒரு மாதம் கழித்து மீண்டும் வேலைக்கு வருவது போல் வந்து மறுபடியும் தொழிலை தொடங்குவார்கள். சென்னை வளசரவாக்கம் மற்றும் மடிப்பாக்கம் பகுதிகளில் இதுபோன்ற குடும்ப விபசார தொழில் நடப்பதாக விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் வளசரவாக்கம் அம்பேத்கர் சாலையில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினார்கள். அங்கு விபசாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் மீட்கப்பட்டனர்.

அவர்களை இந்த தொழிலில் தள்ளிய ரவி (வயது 54) என்ற தரகர் கைது செய்யப்பட்டார். இதேபோன்று மடிப்பாக்கம் ராமலிங்க நகர் பகுதியில் உள்ள வீட்டில் சோதனை நடத்தி பெண் ஒருவரை மீட்டனர். பிரசாந்த் (30) என்ற தரகர் கைது செய்யப்பட்டார்.

மீட்கப்பட்ட பெண்களில் ஒருவர் திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த மே மாதத்தில் இருந்து இவர்கள் வீடுகளை வாடகைக்கு எடுத்து ‘குடும்ப விபசார’த்தில் ஈடுபட்டது

விசாரணையில் தெரியவந்தது. மீட்கப்பட்ட 3 பெண்களும் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். கைதான தரகர்கள் ரவி, பிரசாந்த் ஆகியோர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.