செல்வராகவன் + ஜி.வி. பிரகாஷின் ‘ மெண்டல் மனதில்’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!
இசையமைப்பாளரும், நடிகருமான ஜி. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் ‘மெண்டல் மனதில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகரும், இயக்குநருமான தனுஷ் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘மெண்டல் மனதில்’ படத்தில் ஜி. வி. பிரகாஷுக்கு ஜோடியாக மாதுரி ஜெயின் நடிக்கிறார். இவர்களுடன் முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள்.
அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு, இசை ஜி.வி. பிரகாஷ் குமார், படத்தொகுப்பு : பாலாஜி , கலை இயக்கம் :ஆர்.கே. விஜய் முருகன். பி.ஆர்.ஓ: யுவராஜ். தினேஷ் குணா எக்சிக்யூட்டிவ் புரொடியூஸராக பொறுப்பேற்றிருக்கும் இந்தப்படத்தை பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.வி. பிரகாஷ் குமார் தான் தயாரிக்கிறார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இயக்குநர் செல்வராகவனின் இயக்கத்தில் முதன்முறையாக ‘இசை அசுரன்’ ஜி. வி. பிரகாஷ் குமார் நடிப்பதால்.. ‘மெண்டல் மனதில்’ படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்திலும், திரையுலக வணிக ஏரியாக்களிலும் ஏற்பட்டிருக்கிறதாம்.
— மதுரை மாறன்.