மண்ணில் மனிதம் உருவானது ” கிறிஸ்துமஸ் வாழ்த்து”
மண்ணில் மனிதம் உருவானது
மாட்டுத் தொழுவமது மணிமகுடமானது
மார்கழியும் மகிழ்ச்சி பொங்கும் மாதமானது
மரியின் மடியும் புனிதமானது
வண்ண மலர்கள் பண் இசைத்து ஆடுது
வீசும் காற்றும் தேவன் புகழ் பாடுது
அழகிய பறவைகள் வாழ்த்தொலி கூறுது
அகிலமெங்கும் விடியல் பிறந்தது
வறுமையின் வேரை அறுத்திட
வாழ்வான இறைமகன் உதித்த தினமிது
சமத்துவம் காத்திட சமுதாயம் உயர்ந்திட
உன்னத புனிதன் உயிர்பெற்ற தினமிது
இணையம் இங்கு உலகம் ஆனது
இளமையும் கல்வியும் தடுமாறுது
அன்பை விதைக்க உறவை மேம்படுத்த
மரியின் புதல்வன்
புத்துயிர் பெற்ற தினமிது
போர் வன்முறை போராட்டம் போன்ற
சூழலை களைய
அமைதி என்னும் கருவி
மனுருவான தினமிது
விண்ணில் விடியல் உதயமானது
மண்ணில் மனிதம் உருவானது
— ஜோ சுபா, திருச்சி.