மின்கம்பத்திற்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி படையல் போட்டு போராட்டம் !
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே திருமங்கலங்குறிச்சி பகுதியில் 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்து இருப்பதாகவும்; அதிலும் சில மின்கம்பங்கள் முற்றிலுமாக சேதம் அடைந்து எலும்புக் கூடாக காட்சி தருவதாகவும்; எப்போது வேண்டுமென்றாலும் கீழ விழக்கூடிய சூழ்நிலை இருப்பதால்,
உடனடியாக சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மின்சார வாரியத்திற்கு கோரிக்கை வைத்து வந்த நிலையில் மின்சார வாரியம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதனைக் கண்டித்தும் உடனடியாக சேதம் அடைந்து காணப்படும் மின் கம்பங்களை மாற்ற வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் சேதமடைந்த மின்கம்பத்திற்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி, படையல் போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றிவிட்டு புதிய மின் கம்பங்கள் அமைக்க வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.