ஓடையின் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் கடனுக்கு கட்டப்படுகிறதா, தடுப்பணை ?
ஓடையின் பெரும்பகுதி ஆக்கிரமிப்பாக இருந்து வரும் நிலையில், அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு அதன் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு பதிலாக, பலரும் ஆக்கிரமித்து குறுகலாகிப்போன ஓடையில் “கடமை”-க்கு தடுப்பணை கட்டப்பட்டு வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் முன்வைக்கிறார்கள்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா, கடமலை – மயிலை ஒன்றியத்தில், மந்திச்சுணை மூலக்கடை ஊராட்சி, மயிலாடும்பாறை அருகே உள்ள மிகப்பெரிய நீர் வழித்தட ஓடையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 2024- 2025 ஆம் ஆண்டு, 25 இலட்சம் மதிப்பீட்டில் சிறிய அளவில் தடுப்பணை கட்டி மோசடி செய்து வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள்.
மயிலாடும்பாறை அருகே உள்ள பாறைக்குளம் பாலம் அருகே சுக்கான் ஓடையில் சிமெண்ட் தடுப்பணை கட்டும்பணி நடைபெற்று வருகிறது. இந்த ஓடையில் ஏராளமானவர்கள் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளனர். இதனை அகற்றாமல் தடுப்பணை கட்டும் பணி தற்பொழுது நடத்தப்படுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான மயிலாடம்பாறை பகுதியில் இருந்து மழைக்காலங்களில் மழை நீர் வரக்கூடிய மிகப்பெரிய ஓடை அமைந்துள்ளது. இந்த மிகப்பெரிய ஓடையில் வரக்கூடிய மழை நீர்கள் பின்னர் மூல வைகை ஆற்றில் வந்து கலந்து வைகை அணைக்கு வருகிறது. இந்த மிகப்பெரிய ஓடையில் சிறிய அளவில் தடுப்பணை கட்டி தற்பொழுது மோசடி நடைபெற்று வருகிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
எனவே, இந்த மிகப்பெரிய ஓடையில் அமைக்கப்படும் தடுப்பணையை தடுத்து நிறுத்தி மிகப்பெரிய தடுப்பணை கட்டப்பட்ட அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
— ஜெய்ஸ்ரீராம்.