எங்களிடையே எந்த சேதாரமும் இல்லை … சிதறல் இல்லை … செல்வபெருந்தகை சொன்ன மெசேஜ் !
இந்தியா கூட்டணி மிக வலிமையாக உள்ளது. எந்தசேதாரமும் இல்லை. வரும் சட்டமன்ற தேர்தலில் கருத்துக்கணிப்பை தாண்டி 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். பாஜககூட்டணி தான் சிதறி உள்ளது என்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வ பெருந்தகை கருத்து தெரிவித்திருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
எதிர்வருகிற செப்-7-ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெற இருக்கிற மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் தமிழக காங்கிரஸ் கமிட்டிதலைவர் செல்வ பெருந்தகை தலைமையில் மதுரை தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த காங்கிரஸ் மாவட்டதலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். “இந்தியா கூட்டணி மிக வலிமையாக உள்ளது. எந்த சேதாரமும் இல்லை. எங்கள் கூட்டணியில் பிரச்சினையும் இல்லை. எங்கள் கூட்டணி இந்தியா டுடே கருத்துக்கணிப்பு படி 175 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். வரும் சட்டமன்ற தேர்தலில் கருத்துக் கணிப்பை தாண்டி 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.
எங்கள் கூட்டணியில் சேதாரம் இல்லை. சிதறல் இல்லை. கடந்தமுறை அவர்கள் கூட்டணியில் இருந்த ஒபிஎஸ், தேமுதிக, பாமக தற்போது யாருடன் உள்ளார்கள்? பாஜக கூட்டணிதான் சிதறி உள்ளது. எங்கள் கூட்டணி பலமாக உள்ளது. தற்போது தமிழ்நாட்டின் நான்கு முனை போட்டி உள்ளது. ராகுலுக்கு எதிராக யாராலும் விமர்சனம் செய்ய முடியாது. காங்கிரஸ் இல்லாத கிராமம் இல்லை என்ற வலுவோடு இத்தேர்தலை தமிழக காங்கிரஸ் சந்திக்கிறது. திமுக கூட்டணியில் உள்ள மாநில கட்சிகள் வாய்க்கு வந்த தொகுதிகளை கேட்கலாம். ஆனால், காங்கிரஸ் தேசிய கட்சி தொகுதிகள் கேட்பது குறித்து அகில இந்திய தலைமை வழிகாட்டும். விஜய் தாக்கத்தைவஏற்படுத்துவாரா? என்ற கருத்தில் எனக்கு ஐடியா இல்லை. பிற கட்சியை பற்றி கருத்தில்லை” என்றார்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்