” மஞ்ஞுமல் பாய்ஸ் ஹிட் தான் ‘மின்மினி’க்கு நம்பிக்கை” –தயாரிப்பாளர் மனோஜ் பரமஹம்சா!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

” மஞ்ஞுமல் பாய்ஸ் ஹிட் தான் ‘மின்மினி’க்கு நம்பிக்கை” –தயாரிப்பாளர் மனோஜ் பரமஹம்சா! ஸ்டேஜ் அன்ரியல், பேபி ஷூ புரொடக்ஷன்ஸ் & ஆங்கர் பே ஸ்டுடியோஸ் வழங்கும் ஹலிதா ஷமீம் இயக்கத்தில், கதிஜா ரஹ்மான் கௌரவ் காளை, எஸ்தர் அனில் மற்றும் பலர் நடித்துள்ள ’மின்மினி’ திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது.இதையொட்டி படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா ஜூலை 24 நடைபெற்றது.

இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன், “‘மின்மினி’ படத்தின் பாடல்கள், டிரெய்லர் எல்லாமே சூப்பராக உள்ளது. பெரிய மெனக்கெடல் இந்தப் படத்திற்கு தேவைப்படுகிறது”.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

தயாரிப்பாளர் மனோஜ் பரமஹம்சா
தயாரிப்பாளர் மனோஜ் பரமஹம்சா

ஒளிப்பதிவாளர்& தயாரிப்பாளர் மனோஜ் பரமஹம்சா, “ஆட்டோ சங்கர் எடுத்தபோது என்னைப் பலரும் திட்டினார்கள். ஆனால், அதற்கு பதிலடியாக நிச்சயம் நல்ல படம் கொடுப்பேன் என்ற நம்பிக்கை இருந்தது. அப்படியான ஒரு படமாக ‘மின்மினி’ அமைந்திருக்கிறது. லாபம் தர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் படம் எடுக்கவில்லை.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

நல்ல படம் கொடுக்க வேண்டும் என்ற ஆசைதான் இந்தப் படம்.பலரும் படம் பார்த்துவிட்டு ஃபீல் குட் படம் என்பதால், ஓடிடிக்கு நேரடியாக கொடுத்துவிடுங்கள் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், சமீபத்தில் வெளியாகி ஹிட்டான ’மஞ்சுமெல் பாய்ஸ்’ படம் எனக்கு பெரிய நம்பிக்கை கொடுத்து.

இளையராஜா வின் இசை தரும் உணர்வை கதிஜா கொடுத்திருக்கிறார். ஹலிதா எந்த விஷயத்திலும் காம்ப்ரமைஸ் செய்ய விரும்பாதவர். இந்தப் படம் சிறப்பாக வர காரணம் அவர்தான்.”

மின்மினி -திரைப்படம்
மின்மினி -திரைப்படம்

நடிகை எஸ்தர், “நான் சின்னப் பெண்ணாக இருந்தபோது இந்தப் படத்தில் கமிட் ஆனேன். பல லொகேஷன்ஸ் பல நினைவுகள் இருக்கிறது. ஹலிதாவுக்கு நன்றி. கதிஜா நல்ல இசையைக் கொடுத்துள்ளார்”.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

நடிகர் கெளரவ் காளை, “ஹலிதா மேமுடன் பணிபுரிந்தபோது நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். உடன் நடித்தவர்களும் ரொம்ப சின்சியராக நடித்துக் கொடுத்தார்கள்”.

நடிகர் பிரவீன் கிஷோர், “இது என்னுடைய இரண்டாவது படம். முதல் படமும் ஹலிதா மேம் கூடதான். அவர் இல்லை என்றால் நான் இங்கு இல்லை. குழந்தைகள் வளர இவ்வளவு நாட்கள் ஒரு படத்திற்கு யாராவது காத்திருப்பார்களா எனத் தெரியவில்லை.”

‘திங்க் மியூசிக்’ சந்தோஷ், “‘பூவரசம் பீப்பி’ படத்தில் இருந்து ஹலிதாவுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. கதிஜா போன்ற இளம் திறமைசாலிகளைவரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்”.

இசையமைப்பாளர் கதிஜா ரஹ்மான், “இந்தப் படத்திற்காக கடந்த 2022-ல் ஹலிதா மேம் என்னை அணுகினார். ஹலிதா மேம் தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தது எனக்கு வேலை செய்ய இன்னும் எளிதாக இருந்தது.

என்னை நம்பி வேலை கொடுத்த ஹலிதா மேமுக்கும் எனக்கு வேலையில் பக்கபலமாக இருந்த படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி”.

இயக்குநர் ஹலிதா ஷமீம், “’இதைப் புதுமுயற்சியாக செய்ய வேண்டும் என்று நினைத்து நாங்கள் செய்யவில்லை. படம் எடுக்க ஆரம்பித்தபோது கூட இப்படி காத்திருப்போம் என்று நாங்களும் நினைக்கவில்லை.

ஏனெனில், குழந்தைகளாக இவர்கள் சின்சியராக நடித்துக் கொடுத்ததை இவர்கள் வளர்ந்த பிறகு வந்த போர்ஷனை பிற நடிகர்கள் நடித்துக் கொடுப்பார்களா எனத் தெரியவில்லை.

அதனால்தான், அவர்களுக்காகக் காத்திருந்தேன். இந்தப் படத்தை நம்பி இத்தனை வருடங்கள் கழித்தும் முதலீடு செய்த தயாரிப்பாளர்கள், படத்தை வெளியிடுபவர்கள் உட்பட அனைவருக்கும் நன்றி”.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.