கார் மீது மோதிய மான் ! உயிரிழந்த பிரபல மாடல்!
ரஷ்யாவை சேர்ந்த பிரபல மாடலான 30 வயதான க்சேனியா அலெக்ஸான்ட்ரோவா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ‘மிஸ் யுனிவர்ஸ்’ அழகி போட்டியில் கலந்து கொண்டு பட்டத்தை வென்று ரஷ்யாவில் மிகவும் பிரபலமடைந்தார்.

இந்த நிலையில் இவர் கடந்த ஜூலை 5 ஆம் தேதி தனது கணவருடன் ரஷ்யாவின் ட்வெர் ஓப்லாஸ்ட் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஒரு பெரிய மான் காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்து உள்ளே பாய்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் க்சேனியாவின் கணவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பித்துள்ளார்.
ஆனால் காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த க்சேனியாக்கு நேர் திசையில் மான் பாய்ந்ததால், அவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. இந்த விபத்திற்குப் பிறகு சில நாட்களாக கோமா நிலையில் இருந்த க்சேனியா சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
க்சேனியா உயிரிழப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் செய்து கொண்டார் என்பது ரசிகர்களுக்கிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
— மு. குபேரன்