2024 – நவம்பர் 9-10 : பொன்மலையில் கலக்கும் கட்டைபேட்  விளையாட்டு போட்டி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ங்கிலேயர்கள் இந்தியாவின் பல இடங்களில் தங்கியிருந்தனர் அதில் ஒன்று திருச்சி மாவட்டம் பொன்மலை பகுதியாகும். இங்கு வாழ்ந்த ஆங்கிலேயர்கள் ஓய்வு நேரங்களில் ஹாக்கி, கால்பந்து, போன்ற விளையாட்டுகளுடன் பூப்பந்தாட்டம் விளையாடுவார்கள். பந்துக்கான மட்டை நரம்பு வலையால் பின்னப்பட்டு வெள்ளைக்காரர்கள் ஆ……என கத்திக்கொண்டே குதித்து, குதித்து விளையாடுவதை வேடிக்கைப் பார்த்து வியந்த நம்ம… ஆட்கள் சும்மாயிருப்பார்களா?

இந்த விளையாட்டை விளையாட ஆசைப்பட்டவர்களுக்கு தேவையான பேட் வாங்க பொருளாதாரம் இடம் தராததால், பிறந்த ஐடியாவே கட்டை பேட். முதலில் அட்டையை பேட்டாகவும், துணிகளை கருட்டி, உருட்டி பந்தாகவும் பயன்படுத்த நாளடைவில் மர பலகை பிளைவுட் என உருமாற்றம் பெற்று இன்றளவும் திருச்சி பொன்மலை பகுதியை கலக்கி வருகிறது கட்டை பேட் விளையாட்டு.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

கட்டைபேட்  விளையாட்டு போட்டி
கட்டைபேட் விளையாட்டு போட்டி

ஏராளமான ரசிகர்களை கொண்ட இந்த கட்டை பூப்பந்தாட்ட விளையாட்டை விளையாடும் போது கட்டை பேட்டில் பந்து படும் போது எழுந்திடும் ஓசை பார்த்து ரசிப்பவர்களுக்கு உற்சாகத்தையும், பரவசத்தையும் உண்டாக்கும் என்கிறார்கள் கட்டை பேட் ரசிகர்கள்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

பொன்மலை ரயில்வே காலனியில் உள்ள ஒவ்வொரு குடியிருப்பு அருகிலும் கட்ட பேட் மைதானம் கட்டாயம் இருக்கும். இரவு பகல் ஆட்டம் இருவர், ஐவர் அணிகள் என அமைத்து மோதும் கட்டை பேட் விளையாட்டை நடத்த விளையாட்டு கிளப்களும் உண்டு, வெற்றிக்கான பரிசாக பெருந்தொகையும் உண்டு.

கட்டைபேட்
கட்டைபேட்

இந்நிலையில், பாரம்பரியமான இவ்விளையாட்டை வளர்த்தெடுக்கும் வகையில் பொன்மலை நண்பர்கள் குழு கடந்த ஆறு ஆண்டுகளாக டுதோறும் பூப்பந்தாட்டப் போட்டிகளை தொடர்ந்து நடத்திவருகிறார்கள். தற்போது, எதிர்வரும் நவம்பர் 9 மற்றும் 10 ஆகிய இரு நாட்களில் ஐவர் (5) பங்கேற்கும் பகல் நேர ஆட்டமாக போட்டியை நடத்தவிருக்கிறார்கள். பொன்மலை மார்க்கெட் அருகில் இந்தப் போட்டிகளை நடைபெற விருக்கின்றன.

”இந்திய அளவில் எங்கும் இல்லாத கட்டை பேட் விளையாட்டை வாய்ப்பிருந்தால் ஒருமுறை நேரில் பார்த்து மகிழுங்கள் என்கிறார்” கட்டை பேட் விளையாட்டின் தீவிர ரசிகரான மக்கள் சக்தி இயக்கம் கே.சி.நீலமேகம்.

 

—  அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.